இனி வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை அனுப்பலாம்.. டிஜிட்டல் உலகின் புதிய சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகின் சேவையின் கீழ் தற்போது தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கும் வசதியைப் பல முன்னணி ஈகாமர்ஸ், பேமெண்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக மொபைல் வேலெட் சேவை தளங்களான பேடிஎம், போன்பே போன்ற தளத்தில் Stock Holding Corporation of India அமைப்பின் கோல்டு ரஷ் திட்டத்தின் மூலம் தங்கம் வங்க முடியும். அப்படி டிஜிட்டல் தளத்தில் வாங்கும் டிஜிட்டல் தங்கம் பெரும்பாலும் MMTC-PAMP அல்லது SafeGold அமைப்பின் கீழ் தான் வாங்கப்படுகிறது.

ஆன்லைன் தளத்தில் வாங்கப்படும் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், எவ்விதமான பயமும், அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக Gold accumulation திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு டிஜிட்டல் தங்க விற்பனையை அடுத்தகட்டத்திற்கு முன்னேற பாதை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டிஜிட்டல் முறையில் வாங்கப்படும் தங்கத்தை வாட்ஸ்அப் வாயிலாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இந்திய மக்களின் விருப்பமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தற்போது டிஜிட்டல் முறையில் வாங்கப்பட்ட தங்கத்தை விருப்பமானவருக்கோ அல்லது வேண்டியவருக்கோ தங்கத்தை மெசேஜ் வாயிலாக அனுப்ப கூடிய வசதியை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் கோல்டு

டிஜிட்டல் கோல்டு

இன்று தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவதற்குப் பல வழிகள் இருக்கும் நிலையில், அதிகளவிலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தளமாக SafeGold உள்ளது. இந்நிலையில் SafeGold கீழ் வாங்கப்படும் தங்கம் அனைத்தும் 99.99 சதவீத தூய தங்கம். இத்தளத்தில் வருடத்தின் 365 நாட்களும், வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.

SafeGold - வாட்ஸ்அப் இணைப்பு
 

SafeGold - வாட்ஸ்அப் இணைப்பு

இதை எப்படிச் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

கிப்ட் கோல்டு

1. SafeGold தளத்தில் கணக்கை திறந்து லாகின் செய்யுங்கள்.

2. ஏற்கனவே இத்தளத்தில் தங்கத்தை வாங்கியிருந்தால் அடுத்து வரும் வழிமுறையை அப்படியே தொடருங்கள், இல்லையெனில் தங்கத்தை வாங்கிய பின்பு அடுத்து வரும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

3. SafeGold தளத்தில் டேஷ்போர்டில் கிப்ட் கோல்டு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

4. இந்தப் பக்கத்தில் தங்கத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப நீங்கள் விரும்பிய நபரின் மொபைல் எண்-ஐ பதிவு செய்யுங்கள். இதோடு நீங்கள் வாழ்த்துக்களையும் அனுப்பலாம்.

இணைப்பு

இணைப்பு

நீங்கள் அனுப்பிய தங்கத்தை மறுமுனையில் இருப்பவர் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும் வெப் லிங்க்-ஐ கிளிக் செய்து தத்தம் SafeGold கணக்கில் பெறலாம். இந்த இணைப்பை நீங்கள் வாட்ஸ்அப் வாயிலாகக் கூட அனுப்பலாம்.

இந்த இணைப்பு சில காலம் வரை மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SafeGold கணக்கு இல்லாதவர்கள் OTP பாதுகாப்பு கொண்ட வெப் லிங்க்-ஐ பெறுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital gold: How to gift gold via WhatsApp?

Digital gold: How to gift gold via WhatsApp?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X