பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவு.. மூன்று மடங்கு டிஜிட்டல் பேமென்டுகள் வளர்ச்சி அதிகரிக்கலாம் .. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல இடங்களிலும் பெரிதும் கைகொடுத்து வருவது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான்.

அது நம்மூர் தள்ளு வண்டி கடையில் இருந்து, அம்பானியின் ரிலையன்ஸ் மால் வரையிலும் எங்கும், டிஜிட்டல் பே -களுக்குத் தான் அமோக வரவேற்பு.

 பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவு.. மூன்று மடங்கு டிஜிட்டல் பேமென்டுகள் வளர்ச்சி அதிகரிக்கலாம் .. !

இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் 2025ம் ஆண்டில் 7,092 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் தரவுகள் கூறுகின்றன.

நாட்டில் டிஜிட்டல் பேமென்ட் சந்தை 2019- 2020ல் 2,162 டிரில்லியன் ரூபாயாக இருந்துள்ளது என்று டெர்சீர் கன்சல்டிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போதைய 160 மில்லியன் தனிப்பட்ட மொபைல் கட்டண பயனர்கள், 5 மடங்காக பெருகி 2025ம் ஆண்டில் 800 மில்லியனை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதே 2025ம் நிதியாண்டில் மொபைல் கொடுப்பனவுகள் 7,092 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வாலட்கள் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பலமடங்கு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2025 வாக்கில் வாலட்கள் பரிவர்த்தனை மையமாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டைகர் குளோபல் உள்ளிட்ட பல்வேறு இகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் சில்லறை வணிகத்துடன் இந்த ஊடுருவல் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ரெட்சீர் முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போது ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள், தற்போது கொரோனாவால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலையில், அவர்கள் மளிகை சாமான்கள், அத்தியாவசிய பொருட்கள்\ உள்ளிட்ட பலவற்றிற்கும் இந்த டிஜிட்டல் பயன்பாடுகள் உபயோகப்படுகின்றது.

ஆக தற்போதுள்ள டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரும் வகித்துள்ளது, தற்போது மளிகை சந்தையில் பணம் செலுத்தும் நிலையில் 75% டிஜிட்டல் பேமெண்டுகளாக உள்ளது. அதிலும் குறிப்பாக மொபைல் மூலமாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமென்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிலும் இதுவரை சில நிறுவங்கள் மட்டுமே இந்த டிஜிட்டல் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது சந்தையில் புதியதாக பல நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன. இன்னும் சில ஈ காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது சில்லறை வணிகங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிட்டல் பே செய்பவர்களுக்கு சலுகைகள வாரி வழங்கி வருகின்றன. நிச்சயம் வரும் காலத்திலும் டிஜிட்டல் மேமென்ட் என்பது மக்களின் அத்தியாவசியமான ஒன்றாக கூட இருக்கலாம். இதுவும் நல்ல விஷயம் தானே வரட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital payments market in india will grow 3 times in 2025

Digital payments.. Digital payments market in india will grow 3 times in 2025
Story first published: Sunday, August 23, 2020, 19:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X