பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது ரஷ்ய இந்தியர்கள் திறமையானவர்கள் மற்றும் மற்றவர்களை வழி நடத்தி செல்லும் திறமையான மக்கள் என பாராட்டியுள்ளார்.
அதோடு இந்தியா வளர்ச்சியில் சந்தேகமின்றி சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து வருகின்றது. இதனால் உலகளவில் பணவீக்கம் தலைவிரித்தாடி வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டியை அதிகரித்து வருகின்றன.
சிறந்த வளர்ச்சியினை காணலாம்
இதற்கிடையில் நவம்பர் 4ம் தேதி ஆண்டுதோறும் ரஷ்யாவில் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி நடந்த விழாவில் கலந்து கொண்ட அதிபர் புதின், இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான திறமையான மற்றும் மற்றும் கடுமையாக உழைக்க கூடிய மக்களைக் கொண்டுள்ளது. ஆக வளர்ச்சி என வரும்போது நிச்சயம் இந்திய சிறந்த வளர்ச்சியினை காணலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்கள் உள்ளனர். அதுவே அவர்களுக்கு பலமாக உள்ளது..
இந்தியா பெருமை கொள்ளலாம்
இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பாராட்டி புதின், மோடியின் தலைமையில் இந்தியா நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. அவர் ஒரு தேசபக்தர், மேக் இன் இந்தியா என்ற அவரது யோசனை பொருளாதார ரீதியாக முக்கியமானது. எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம். அது உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.
வளர்ச்சிக்கு என்ன காரணம்?
பிரிட்டனின் கீழ் இருந்து தற்போது நவீன நாடாக வளர்ந்துள்ள இந்தியாவின் பொருளாதாரம், பெரிய அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் திட்டவட்டமான முடிவுகள், இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும் அபிமானத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியா ரஷ்யா நட்பு குறித்து நெகிழ்ச்சி
இந்தியா, ரஷ்ய உறவு குறித்து பேசியவர், பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உறவால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளை எதிர்கொள்ளவில்லை. எங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொண்டுள்ளோம். அது இப்போதும் தொடர்கிறது. எதிர்காலத்திலும் அது தொடரும் என நான் உறுதியாக நம்புகிறேன் என இந்தியா ரஷ்யாவின் உறவு குறித்து கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
மோடிக்கு பாராட்டு
இந்திய விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உரத்தின் சப்ளையை அதிகரிக்க பிரதமர் மோடி கூறிய நிலையில், அதனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் பாராட்டி இருப்பது, மேற்கத்திய நாடுகள் மத்தியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications