வளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக பின்னடைவை சந்தித்த ஏற்றுமதி, இறக்குமதிகள், தற்போது தான் சற்று துளிர்விட ஆரம்பித்துள்ளன.

 

இந்த நிலையில் ஏற்றுமதி செய்யும் கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் உயர் தொழில் துறை அமைப்புகள், அரசாங்கம் கட்டாயம் இந்தியாவுக்கு வெற்று கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளன.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) மதிப்பீடுகள், கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவிற்கு கொள்கலன் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது கிட்டதட்ட 60% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஆப்பிரிக்க துறைமுகங்களுக்கு ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இதே ஐரோப்பிய பகுதிகளுக்கு 50%மும் அதிகரித்துள்ளது.

கொள்கலன் பற்றாக்குறை

கொள்கலன் பற்றாக்குறை

ஒட்டுமொத்தத்தில் இந்த விகிதமானது அனைத்து இடங்களிலும் 50% மேலாக அதிகரித்துள்ளதாக FIEO கூட்டமைப்பின் தலைவர் ஷரத் குமார் சராஃப் கூறியுள்ளார். மேலும் இந்த கொள்கலன் பற்றாக்குறையை சீராக்குவதற்கான ஒரே வழி, இந்திய கடல்சார் ஆணையம் வெற்றுக் கொள்கலன்களை திரும்ப கொண்டு வருமாறு அறிவுறுத்துவதாகும்.

கட்டணங்கள் அதிகரிப்பு
 

கட்டணங்கள் அதிகரிப்பு

இது மிகவும் கடுமையான ஒரு பிரச்சனை. ஏற்றுமதி செய்வதற்கான கொள்கலன்கள் இல்லை. கொள்கலன்கள் பற்றாக்குறையால் கப்பல் நிறுவனங்களும் கட்டணங்களை அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவிற்கு சரக்கு விகிதம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே ஆப்பிரிக்க துறமுகங்களுக்கு இது கிட்டதட்ட 100 சதவீதமாகவும், ஐரோப்பிய துறை முகங்களுக்கு 50% அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்தம் 50% மேல் அதிகரித்துள்ளதாக FIEO தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் 10 – 15 கொள்கலன் தேவை

வாரம் 10 – 15 கொள்கலன் தேவை

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஸ்டார்டப் நிறுவனமான Gxpress ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய 10 - 15 கொள்கலன்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது. அதோடு ஒவ்வொரு கொள்கலனுக்கும் அமெரிக்கா தற்போது கிட்டத்தட்ட 3,600 டாலர்களை செலுத்துகிறது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் பிரவீன் வஷிஷ்டா கூறியுள்ளார்.

மூன்று நாடுகளுக்கு அதிகரிப்பு

மூன்று நாடுகளுக்கு அதிகரிப்பு

நாங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறோம். இந்த மூன்று நாடுகளுக்கும் தற்போது கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து வருவதை நாங்கள் காண்கிறோம். ஏற்றுமதியாளரை பொறுத்த வரையில், ஏற்றுமதிகளை அனுப்புவது கடினமாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாளர்கள் ஒரு கொள்கலனுக்கு 1,700 - 1,800 டாலர்களை செலுத்தினர். ஆனால் அது தற்போது மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு ஒரு கொள்கலனை நகர்த்தும்போது 2,800 - 3,000 டாலர்களுக்கு மேல் செலவாகிறது.

ஆறு மாதங்களுக்கு பிறகு க்ரீன் சிக்னல்

ஆறு மாதங்களுக்கு பிறகு க்ரீன் சிக்னல்

ஆறு மாதம் சரிவுக்கு பின்னர், செப்டம்பர் 2020ல் ஏற்றுமதி இந்தியாவில் சாதகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தினை விட 5.99% வளர்ச்சி கண்டு, 27.58 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த காலகட்டத்தில் இறக்குமதி முன்பை விட 19.6% குறைந்து, 30.31 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

இந்திய அரசின் முக்கிய நடவடிக்கை

இந்திய அரசின் முக்கிய நடவடிக்கை

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் படி, ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 16.66% குறைந்து, 221.86 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 35.43% குறைந்து, 204.12 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவிலிருந்து குறைப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை, இறக்குமதியில் சுருக்கத்தினை காண வழிவகுத்தது.

தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றம்

அங்கு பலப் பிரச்சனைகள் உள்ளன, அங்கு ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. இதே இறக்குமதிகள் குறைந்துள்ளன. இது முன்பை விட தலைகீழ் மாற்றமாகும். இது இப்படி நீடித்தால் நன்றாகத் தான் இருக்கும். எப்படி இருந்தாலும், ஏற்றுமதி செய்ய கொள்கலனை இந்திய அரசு அதிகரிக்க வேண்டும், அப்போது தான் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியான நேரத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Exporters struggle for container after prices shoots 50 – 100%

Exporters struggle for container after prices shoots 50 – 100%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X