கோடிஸ்வரனாக கார்வேர் டெக்னிக்கல் கொடுத்த நல்ல வாய்ப்பு.. 6 வருடத்தில் அமேசிங் புராபிட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ், நீங்கள் பங்கு சந்தையினை பற்றி தெரிந்திருந்தால், நிச்சயம் இந்த நிறுவனத்தினை பற்றி அறிந்திருக்கலாம்.

 

இந்தியாவின் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனம் தான் இந்த கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பிரமாண்ட வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

இந்த நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிப்புகளில் முன்னணி நிறுவனமாகவும் இருந்து வருகிறது.

6 வருடத்தில் 3,200% லாபம்

6 வருடத்தில் 3,200% லாபம்

இந்தளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ள கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட், அதன் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினையும் கொடுத்துள்ளது எனலாம். கடந்த ஏப்ரல் 2014ல் இருந்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6 வருடத்தில் 3,200 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இதே செப்டம்பர் 2009ல் இருந்து ஒப்பிடும்போது அடுத்த 5 வருடங்களில் பெரியளவில் லாபம் எதனையும் கொடுக்கவில்லை.

பலமடங்கு லாபம்

பலமடங்கு லாபம்

இந்த நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு பெருகியுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் கடந்த 2010ம் நிதியாண்டில் வெறும் 19 கோடி ரூபாயாக இருந்த இதன் நிகரலாபம், 2020ம் நிதியாண்டில் 140 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த விற்பனையானது 451 கோடி ரூபாயில் இருந்து, 953 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு
 

சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு

அதுமட்டும் அல்ல தற்போது உலகளாவிய சந்தையிலும் கார்வேர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வணிக ரீதியிலான மீன்பிடி வலைகளின் உலகளாவிய சந்தையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கினை கார்வேர் நிறுவனம் கொண்டுள்ளது. இது நார்வே, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஒரு முக்கியமான பொருளாகவும் உள்ளது.

வளர்ச்சிக்கு என்ன காரணம்

வளர்ச்சிக்கு என்ன காரணம்

கார்வேர் நிறுவனத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை பூர்த்தி செய்வதாக உள்ளது. அதிலும் அத்தகைய தயாரிப்புகளை குறைந்த விலையில் தரமான பொருளாகவும் உள்ளது. இதுவே இந்த நிறுவனம் இந்தளவுக்கு வளர்ச்சி காண முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

இனியும் வளர்ச்சி அதிகரிக்கும்

இனியும் வளர்ச்சி அதிகரிக்கும்

இந்த வளர்ச்சியானது இனி வரும் ஆண்டுகளில் தொடரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2007க்கு பிறகு இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது அக்ரோடெக், கோட்டடு பேப்ரிக்ஸ், பாதுகாப்பு போன்ற வணிக பிரிவுகளால் இயக்கப்படுகிறது. மேலும் லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா போன்ற புதிய ஏற்றுமதி சந்தைகளில் அதிகரிப்பு உள்ளது. ஆக இனி வரும் காலத்தில் கூட மிதமான வளர்ச்சி காணலாம் எனவும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

பங்கு விலை

பங்கு விலை

கடந்த 2009, செப்டம்பரில் கார்வேரின் பங்கு விலையானது 68 ரூபாயாக இருந்தது. இதே செப்டம்பர் 1, 2014ல் 172 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1, 2020ல் இதன் விலையானது 1839 ரூபாயாகவும் இருந்துள்ளது. எனினும் இன்று அதன் பங்கு விலையானது 2002 ரூபாயாகும். 2009ல் இந்த நிறுவனத்தின் பங்கில் 5 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்களால் 7500 பங்குகளை வாங்கியிருக்க முடியும். இன்றைய பங்கு மதிப்பில் அதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

garware technical fibres gave an opportunity to become a crorepati

garware technical fibres given great chances to investors, are you bought his stock
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X