மனம் மயக்கும் புவிசார் குறியீடுள்ள மதுரை மல்லி உள்பட பல மலர்கள் ஏற்றுமதி.. தமிழகத்திற்கே பெருமை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் நாட்டில் உள்ள பெண்களில் மல்லிகை பூவின் மேல் ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது. அதிலும் மதுரை மல்லி என்றால் சொல்லவே வேண்டாம். பெண்கள் விரும்பும் ஒரு விருப்பமான மலர் எனலாம்.

இது இந்தியாவில் மட்டும் அல்ல, பல உலக நாடுகளிலும் விருப்பமான ஒரு மலராக உள்ளது. இந்த நிலையில் புவிசார் குறியீடுள்ள மதுரை மல்லி உள்பட பல மலர்களும், அமெரிக்கா மற்றும் துபாய் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் கேந்திரா.. அமேசான்.காம் இந்தியாவில் துவங்கிய புதுச் சேவை..!டிஜிட்டல் கேந்திரா.. அமேசான்.காம் இந்தியாவில் துவங்கிய புதுச் சேவை..!

வெளி நாடுகளில் வசிக்கும் நம்மவர்களுக்கும், கோயில்களுக்கும் இந்த பூக்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட மதுரை மல்லி, பட்டன் ரோஸ், லில்லி, சாமந்தி போன்ற பாரம்பரிய பூக்கள் இன்று அமெரிக்கா மற்றும் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

புவிசார் குறியீடு எதற்கு

புவிசார் குறியீடு எதற்கு

இந்தியாவின் பல பகுதிகளிலும் மல்லிகை பூ விளைகின்றது என்றாலும், மதுரை மல்லிக்கு என்றுமே தனி இடம் உண்டு. இதனால் மதுரை மல்லிக்கு என்று புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.

புவிசார் குறியீடு என்பது ஓரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். இது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தினை காப்பதற்குமான சான்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அப்படி சான்றளிக்கப்பட்டது தான் மதுரை மல்லி, மற்றும் பல மலர்கள் உள்ளன.

ஏற்றுமதியினை அதிகரிக்க உதவும்

ஏற்றுமதியினை அதிகரிக்க உதவும்

இது மதுரை மல்லி என்ற பெயரில் மற்ற பகுதி மல்லிகை பூவை விற்பதோ அல்லது பிற பூக்களை இதனுடன் கலப்படம் செய்வதோ முடியாது. இப்படி ஜிஐ சான்றளிக்கப்பட்ட மலர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயமாகவும் உள்ளன. அதோடு ஏற்றுமதியினை அதிகரிக்கவும் உதவுகிறது.

எவ்வளவு ஏற்றுமதி

எவ்வளவு ஏற்றுமதி

கடந்த 2020 - 2021ம் ஆண்டில் 66.28 கோடி ரூபாய் மதிப்பிலான பல மலர்கள், பூங்கொத்துகள் அமெரிக்கா, யுஏஇ மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை, கோயமுத்தூர், மதுரை விமான நிலையங்களில் இருந்து மட்டும் 11.84 கோடி ரூபாய் மதிப்பிலான மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மல்லியின் தலை நகர்

மல்லியின் தலை நகர்

தமிழகத்தில் மல்லிகை பிரபலமானது. குறிப்பாக மதுரை மல்லி மிக பிரபலமானது. இதனையடுத்து சமீபத்திய காலங்களில் தான், மல்லிகையின் தலைநகராக மதுரை உருவெடுத்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

எங்கிருந்து பெறப்பட்டவை?

எங்கிருந்து பெறப்பட்டவை?

குறிப்பாக தமிழ்நாடு ஏற்றுமதியாளர்கள் ஜிஐ சான்றளிக்கப்பட்ட மதுரை லல்லி மற்றும் பட்டன் ரோஸ், லில்லி, சாமந்தி பூக்களுக்கு இன்று அமெரிக்கா மற்றும் துபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தமிழகத்திற்கு பெருமையளிக்கும் ஒரு விஷயமாகும்..

இந்த மலர்கள் தமிழகத்தின் மூன்று மாவட்டங்கள், நீலகோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பெறப்பட்டவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Geographical indication certified Madurai malli and other flowers exported to US and Dubai from TN

Export latest updates.. Geographical indication certified Madurai malli and other flowers exported to US and Dubai from Tamil nadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X