மாத சம்பளம் வாங்குவோருக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டை பொறுத்தவரையில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? அடுத்த மாத சம்பளம் வருமா? வராதா? முழு சம்பளமும் கிடைக்குமா? கிடைக்காதா? சம்பளவு உயர்வு? பதவி உயர்வு என எல்லாமே கேள்விக்குறியாக இருந்தது.

 

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஆவது இதெல்லாம் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கும். போன வருடமே சம்பள உயர்வு இல்லை. பதவி உயர்வு இல்லை. இந்த ஆண்டில் ஆவது இருக்குமா? அப்படி இருந்தாலும் எவ்வளவு இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

இதற்கிடையில் Deloitte Touche Tohmatsu India LLP நடத்திய ஆய்வில், இந்தியாவில் 90% அதிகமான நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் 7.3% சம்பள உயர்வு கொடுக்க திட்டமிட்டுள்ளனவாம்.

சம்பள உயர்வு & பதவி உயர்வு

சம்பள உயர்வு & பதவி உயர்வு

இந்த ஆய்வானது 400 அமைப்புகளிடம் நடத்தப்பட்டது. குறிப்பாக 7 துறைகள், 25 துணைத் துறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பதிலளித்த நிறுவனங்களில் 20% நிறுவனங்கள், இருமடங்கு சம்பள அதிகரிப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளன. அதெல்லாம் சரி எந்த துறைகளில் எவ்வளவு கூறியிருக்கிறார்கள் வாருங்கள் பார்க்கலாம்.

எந்தெந்த துறையில் எவ்வளவு?

எந்தெந்த துறையில் எவ்வளவு?

இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது லைஃப் சயின்ஸ் தான். அவர்கள் 9.2% சம்பள உயர்வு கொடுக்க திட்டமிட்டுள்ளன. இதே ஐடி துறையில் 8.6%மும், நுகர்வோர் பொருட்கள் துறையில் 7.6%மும், இருப்பதிலேயே குறைவு சேவைத் துறையில் தான். இந்த துறையில் 5.9% சம்பள உயர்வு கொடுக்க திட்டமிட்டுள்ளன. ஏனெனில் இந்த துறைகள் கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எங்கு குறைவு?
 

எங்கு குறைவு?

இதே மற்ற துறைகளில் பார்க்கும்போது, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மற்றும் புதுபிக்கதக்க எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளிலும் சம்பள உயர்வு குறைவாக இருக்கலாம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பள உயர்வு எண்கள் கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக இருந்தாலும், 2019 சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இது 2019ல் 8.6% ஆக இருந்தது கவனிக்கதக்கது.

இழப்பினை ஈடுசெய்ய?

இழப்பினை ஈடுசெய்ய?

கடந்த ஆண்டு சம்பளத்தினை குறைத்த நிறுவனங்கள், 12% மட்டுமே சம்பளங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதே 13% நிறுவனங்கள் ஒரு முறை போனஸ் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளன. சுமார் 55% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, ஏற்பட்ட ஊதிய இழப்புக்கு ஈடுசெய்ய விரும்பவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட பணிகளுக்கு அதிக ஊக்கம்

குறிப்பிட்ட பணிகளுக்கு அதிக ஊக்கம்

பெரும்பாலும் நிறுவனங்கள் சில வேலைகளை சேமிக்க விரும்புகின்றன. அதாவது குறிப்பிட்ட பணிகளுக்கு அதிக சம்பள உயர்வு அல்லது போனஸ் கொடுக்க திட்டமிள்ளன. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இன்னும் நிறுவனங்கள் மீண்டு வர வில்லை. ஆதலால் அவை எச்சரிக்கையுடன் நடப்பதில் ஆச்சரியமில்லை என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பதவி உயர்வுக்கு வாய்ப்பு

பதவி உயர்வுக்கு வாய்ப்பு

கடந்த ஆண்டில் 7.4% ஆக இருந்த நிலையில், வரவிருக்கும் நிதியாண்டில் 10.2% ஊழியர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. இதே பதவி உயர்வுடன் 7% சம்பள உயர்வும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் கடந்த ஆண்டை போல வெறும் பதவி உயர்வு மட்டும் அல்லாமல், இந்த ஆண்டு நல்ல ஊக்கமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news! Salary increment projected at 7.3 percent current year

Salary increment survey updates.. Good news! Salary increment projected at 7.3 percent current year
Story first published: Thursday, February 18, 2021, 21:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X