75வது சுதந்திர தினம்: கூகுள்-ன் புதிய திட்டம்.. சுந்தர் பிச்சை செம..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் கூகுள் தனது பங்கிற்கு 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது

மேலும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை கூகுள் வெளியிட்டுள்ளது

இந்தியா கி உதான்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல அரிய தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை உள்ளன.

கூகுள், பேஸ்புக்-ஐ வரிசையில் சோமேட்டோ.. தீபிந்தர் கோயல் போடும் மாஸ்டர் பிளான்..!கூகுள், பேஸ்புக்-ஐ வரிசையில் சோமேட்டோ.. தீபிந்தர் கோயல் போடும் மாஸ்டர் பிளான்..!

75வது சுதந்திர தினம்

75வது சுதந்திர தினம்


இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கடந்த சில நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கூகுள்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கூகுள்

இந்த நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் கூகுள் நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் கலை மற்றும் கலாச்சார பிரிவு, இந்தியாவின் 75 ஆண்டுகால சாதனை, வளர்ச்சி மற்றும் சாதனையாளர்களை குறிப்பிடும் வகையில் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

'இந்தியா கி உதான்'

'இந்தியா கி உதான்'

இரண்டு நிமிடங்கள் உள்ளடக்கிய இந்த வீடியோ 'இந்தியா கி உதான்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும், அனிமேஷன் வடிவில் உள்ள இந்த வீடியோவில் பல அரிய புகைப்படங்கள் தகவல்கள் ஆகியவை உள்ளன என்பதும், இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மாணவர்களுக்கு போட்டி

மாணவர்களுக்கு போட்டி

டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரி என்ற பகுதியில் நடைபெற்ற இந்த வீடியோ வெளியிட்டு விழாவில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு போட்டி

மாணவர்களுக்கு போட்டி

மேலும் 'அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா' என்ற தலைப்பில் டூடுல்4கூகுள் போட்டி என்ற போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

பரிசு

பரிசு

இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு மற்றும் தொழில்நுட்ப கருவிகள் பரிசாக வழங்கப்படும் என்றும் வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் நவம்பர் 14ஆம் தேதி கூகுள் டூடுலில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கிஷன் ரெட்டி

அமைச்சர் கிஷன் ரெட்டி

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிஷன் ரெட்டி கலாச்சார அமைச்சகத்தின் 3,000 க்கும் மேற்பட்ட மையப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை டிஜிட்டல் மேப்பிங் செய்வதில் கூகுள் உதவி செய்து வருவதாகவும், அரிய காப்பகப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கவும் இது உதவும் என்றும் கூறினார். மேலும் இந்தியாவின் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருக்க கூகுள் குழுவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று ரெட்டி கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google launches ‘India Ki Udaan’ to mark 75 years of country’s independence

Google launches ‘India Ki Udaan’ to mark 75 years of country’s independence | 75வது சுதந்திர தினம்: கூகுள்-ன் புதிய திட்டம்.. சுந்தர் பிச்சை செம..!
Story first published: Monday, August 8, 2022, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X