செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய கண்டத்தின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் காட்டில் சமீப காலமாக பண மழையாக பெய்து கொண்டுள்ளது எனலாம்.

ஏனெனில் கொரோனாவுக்கு மத்தியிலும் மிகவும் பரபரப்பான சூழலில், பல ஆயிரம் கோடி முதலீடுகளை திரட்டி வருகிறது. தற்போதும் அதன் சில்லறை வர்த்தகத்திற்காக திரட்டிக் கொண்டுள்ளது.

அதன், ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 7.73 சதவீதம் பங்கின் மூலம், 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த முதலீட்டினை கூகுள் நிறுவனம் ஜியோவில் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கருப்பு தீபாவளி..! ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..! கருப்பு தீபாவளி..! ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..!

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

ஜியோவில் கூகுள் மட்டும் அல்ல, 13 மிகப்பெரிய முதலீடுகள் செய்யப்பட்டது. ஜியோ நிறுவனம் இந்த முதலீடுகள் மூலம் அதன் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளது.

பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், குவால்காம் வென்சர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. ஆக மொத்தத்தில் ஜியோவின் சுமார் 33% பங்குகளை விற்பனை செய்யதுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனம் 1.52 டிரில்லியன் ரூபாயினை திரட்டியது.

 

உரிமை பங்கு வெளியீடு

உரிமை பங்கு வெளியீடு


இதோடு ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டிய நிதியின் மூலம், தற்போது கடன் இல்லா நிறுவனமாகவும் மாறியுள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவன்ம் 388 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இதனோடு டிஜிட்டல் சொத்துகள் பிராட்பேண்ட் இணைப்பு, கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா அனலிஷ்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன.

 

டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த உதவும்

டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த உதவும்

கூகுள் - ஜியோ ஒப்பந்தம் இந்தியாவில் தற்போதைய 500 மில்லியன் நெட் பயனர்களை தாண்டி வளர உதவும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்கனவே தனக்கென கணிசமான வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஜியோ நிறுவனம், மேற்கொண்டு உலகம் முழுக்க விரிவடைவதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளது.

தொலைத் தொடர்பு துறையில் நம்பர் 1

தொலைத் தொடர்பு துறையில் நம்பர் 1

ஏற்கனவே இந்தியாவில் கணிசமான பங்கினை வகிக்கும் ஜியோ நிறுவனம், தொலைத் தொடர்பு துறையில் தொடர்ந்து முதலிடம் வகிக்க இன்டஹ் ,முதலீடுகள் பயன்படலாம் கூறப்படுகிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் உலகத்தை சிறந்த முறையில் மேல்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான முதலீடுகள்

தொடர்ச்சியான முதலீடுகள்

இந்தியா முதலீட்டு சந்தைகளின் கவர்ச்சிகரமான ஒரு நாடாக கருதப்படுவதாலும், அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாலும், ஜியோ தொடர்ச்சியாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அதன் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த இது பயன்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google pays Rs.33,737 crore to jio platforms

Google pays Rs.33,737 crore to jio platforms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X