11 சேவை துறைகள் அடையாளம்.. அரசின் அசத்தல் திட்டம்.. எந்தெந்த துறைகள்ன்னு பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்த வரையில் இதுவரையில் சேவைத் துறையில் முன்னணி துறைகளாக இருந்து வருவது, ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த துறைகள தான்.

 

ஆனால் மற்ற சேவைத் துறைகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. குறிப்பாக 2030க்குள் சேவை ஏற்றுமதியினை 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுவரையில் சேவை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருவது ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் தான். ஆனால் மற்ற சேவை துறைகளையும் ஊக்குவிக்கும் விதமாக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

11 துறைகள் அடையாளம்

11 துறைகள் அடையாளம்

தற்போது அரசின் கவனம் சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற சில முக்கிய துறைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதுபோன்ற 11 துறைகளை அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த சேவை ஏற்றுமதியில், ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன. ஏற்கனவே ஏற்றுமதியினை விரிவாக்கம் செய்யும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சேவை வணிகம் அதிகரிக்கும்

சேவை வணிகம் அதிகரிக்கும்

எனினும் இதனை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்த உலகளாவிய சேவைகள் மாநாட்டில், இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் இணைச் செயலாளர் தர்பன் செயின் கூறியுள்ளார்.
மேலும் 2040ல் மொத்த சர்வதேச வணிகத்தில், சேவைத் துறையின் வணிகம் மேம்பட்டு விடும் என்றும் ஜெயின் சுட்டி காட்டியுள்ளார்.

சுற்றுலா துறை
 

சுற்றுலா துறை

இந்தியாவினை பொறுத்த வரையில் சுற்றுலா துறையும் வெற்றிகரமான ஒன்று. உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கிறோம். ஆனால் அதில் தாய்லாந்து மற்றும் மலேசியாவினை விட நமது பங்கு மிகச்சிறியது. இந்தியாவில் இன்னும் சுற்றுலா துறையானது மேம்படவில்லை. இதனை இன்னும் ஊக்குவிக்கலாம்.

கல்வி துறை

கல்வி துறை

இதே கல்வித் துறையை எடுத்துக் கொண்டால் மேல்படிப்புக்காக 5 மில்லியன் மாணவர்கள் அண்டை நாடுகளை நோக்கி பயணம் செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் வெறும் 50,000 மாணவர்களையே பெறுகிறோம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். உண்மையில் இந்த வித்தியாசம் மிக அதிகம் தான். சொல்லப்போனால் யோசிக்க வேண்டிய விஷயமும் கூட.

டிஜிட்டல் முறையில் சேவை

டிஜிட்டல் முறையில் சேவை

இவ்வாறு ஒவ்வொரு துறையை பட்டியலிட்ட ஜெயின், சேவை துறையில் எப்படி ஏற்றுமதியை அதிகரிப்பது என்பது பற்றியும், அதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் பட்டியலிட்டுள்ளார். இதில் முக்கியமான ஒன்று டிஜிட்டல் முறையில் சேவைகளை வழங்குவது ஆகும்.

டிஜிட்டல் தேவை

டிஜிட்டல் தேவை

வெற்றிக்கான முதல் படி டிஜிட்டல் வளர்ச்சி தான். ஆக டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துங்கள். டிஜிட்டல் இ-காமர்ஸ் சேவைகளின் ஒரு பகுதியாக நாம் எவ்வாறு மாறலாம். இங்கு டிஜிட்டல் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆக சாத்தியமான அளவுக்கு டிஜிட்டல் முறையில் சேவைகளை வழங்கலாம்.

FTAs பற்றிய பேச்சு வார்த்தை

FTAs பற்றிய பேச்சு வார்த்தை

அரசு தற்போது ப்ரீ டிரேடு ஒப்பந்தங்களை (FTAs) பற்றி பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றது. ஆக இது சேவைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க முக்கிய காரணமாக அமையலாம். தற்போது நாங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை பெரிய சேவை சந்தைகளாக உள்ளது. ஆக பல நாடுகளுடன் FTAs பற்றிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம் என ஜெயின் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt identifies 11 key sectors to boost services Export

India’s trade updates.. Govt identifies 11 key sectors to boost services Export/11 சேவை துறைகள் அடையாளம்.. அரசின் அசத்தல் திட்டம்.. எந்தெந்த துறைகள்ன்னு பாருங்க..!
Story first published: Tuesday, November 9, 2021, 21:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X