இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்காவின் பிரபலமான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்திய சந்தையில் விற்பனை சரிவு காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இது ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்களுகு ஒரு பேரதிர்ச்சியாகவும் இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு!

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை
ஆனால் தற்போது ஹார்லி டேவிட்சன் இன்க் நிறுவனம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒரு ஓப்பந்ததிற்காக, ஒரு மேம்பட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இது அமெரிக்காவின் பிரபலமான இந்த பைக்கினை, இந்தியாவில் ஹீரோ மோட்டோ கார்ப் மூலம் விற்பனை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இதனையறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹார்லி டேவிட்சன் – ஏன் இந்த முடிவு?
இது உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மோட்டார் துறையானது பெரும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் பெருத்த சரிவினைக் கண்டது. இதனால் தனது Rewire என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளில் இருந்து விலகிக் கொள்ள ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில் இதன் மூலம் தான் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறவும் திட்டமிட்டுள்ளது.

சர்வீஸ் வசதி உண்டு
ஹார்லி டேவிட்சனின் இந்த அதிரடி முடிவால் 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஹரியானாவின் பவலில், உள்ள ஆலையை மூட உள்ளது. எனினும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதியளித்தது இருந்தது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்தியாவில் கொடுக்க முடியும் என ஹார்லி நினைக்கிறது.

இந்தியாவில் மிகப்பெரிய ஹீரோ மோட்டோ கார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், 2020ம் நிதியாண்டில் 6.4 மில்லியன் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில் ஹார்லி டேவிட்சன் 4500 மோட்டார் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்தது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் ஒப்பந்தம் செய்தால், ஹீரோ நிறுவனம் தனது விற்பனையை இன்னும் விரிவாக்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனினும் இந்த ஒப்பந்தம் இறுதியாகுமா??