அதிகரித்து வரும் வட்டியால் பங்கு சந்தையில் தாக்கம் எப்படியிருக்கும்.. முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தைகள் பலமான ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. பெரு நிறுவனங்களின் வளர்ச்சி பற்றிய கவலையும் இருந்து வருகின்றது. எனினும் அவற்றுடன் ஒப்பிடும்போது தெற்காசிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி காணலாம் என நம்பப்படுகின்றது.

சமீபத்திய சரிவுகளுக்கு பிறகு நாட்டின் முக்கிய குறியீடான நிஃப்டி குறியீட்டை உள்ளடக்கிய பங்குகள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும், அடுத்த 12 மாதங்களில் சுமார் 15% வருமானத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் தெரியுமா?இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் தெரியுமா?

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

மற்ற வளர்ந்து வரும் சந்தைகளை விட இந்திய சந்தையானது சற்று சாதகமான இடைவெளியுடனே இருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. அண்டை நாட்டு முதலீட்டாளார்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர். ஏனெனில் மேற்கத்திய நாடுகள் மந்த நிலைக்கு மத்தியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக அவற்றின் பங்கு சந்தைகள் இன்னும் சரியலாமோ என்ற கவலையும் இருந்து வருகின்றது.

செல்லிங் அழுத்தம்

செல்லிங் அழுத்தம்

கடந்த ஜூலை மாதம் முதல் செல்லிங் அழுத்தம் குறைந்திருந்தாலும், இந்த ஆண்டில் இதுவரையில் 23 பில்லியன் டாலர்கள் இந்திய பங்கு சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது. எனினும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கானது, இந்திய சந்தையில் வலுவாக காணப்பட்டது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தையானது வலுவாக காணப்படுகின்றது.

வட்டி அதிகரிப்பால் தாக்கம் இல்லை
 

வட்டி அதிகரிப்பால் தாக்கம் இல்லை

இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றது. இது கடந்த மே மாதம் முதல் 1.9% வரையில் உயர்த்தியுள்ளது. எனினும் இந்த காலக்கட்டத்திலும் இந்திய முதலீட்டாளர்கள் அதன் தாக்கத்தினை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம்.

வட்டி அதிகரிக்க யோசனை

வட்டி அதிகரிக்க யோசனை

ரிசர்வ் வங்கியின் முடிவினால் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது. எனினும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வங்கிகள் யோசிக்கின்றன. ஒரு சில வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், பலரும் பின் வாங்குகின்றனர்.

பங்கு சந்தையா? பிக்சட் டெபாசிட்டா?

பங்கு சந்தையா? பிக்சட் டெபாசிட்டா?

பணவீக்கம் அதிகரித்த காலகட்டத்தில் வங்கிகள் முதலீட்டாளர்கள் சரியான ஆதரவினை வழங்காததால், முதலீட்டாளார்கள் ஈக்விட்டி சந்தைகளில் நுழைந்துள்ளதனர். உதாரணத்திற்கு தற்போது எஸ்பிஐ-யில் 5 ஆண்டு திட்டத்தில் வட்டி விகிதம் 5.85% எனில், தற்போதைய லெவலில் பணவீக்கம் என்பது 7.4% என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே இந்திய அரசும் முதலீட்டாளர்களுக்கு 6.3% முதல் 7.5% வரையில் செலுத்துகின்றது.

முதலீட்டாளர்கள் உற்சாகம்

முதலீட்டாளர்கள் உற்சாகம்

வங்கிகளின் இந்த நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடுகளை அதிகரிக்கலாம். வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதை விட, வங்கிகள் பங்குகள் பரவாயில்லை என்னும் லெவலுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையே ஒரு உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கடன் தேவை

கடன் தேவை

தற்போது கொரோனாவில் இருந்து மீளத் தொடங்கியுள்ள பொருளாதாரம், தேவையினை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக கடன் தேவையையும் ஊக்குவிக்கிறது. அதேசமயம் டெபாசிட் தொகையானது அவ்வளவாக அதிகரிக்கவில்லை. இது 9% மட்டுமே அதிகரித்துள்ளது.

எப்போது திரும்புவார்கள்?

எப்போது திரும்புவார்கள்?

தொடர்ந்து கடனுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் தொடர்ந்து லாபமடையலாம். இதனால் இந்திய வங்கிகள் நல்ல ஏற்றம் காணலாம். எனினும் இது ஒரு வருடத்தில் பிரீமிய உச்சத்தினை எட்டலாம். இதன் காரணமாக பங்கு சந்தை முதலீட்டாளர்கள் நிலையான லாபம் தரும் வைப்பு நிதிகளில் அப்போது கவனம் செலுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can rising interest rates affect the stock market?

Banks did not provide proper support to investors during the period of high inflation. Due to this, investors have entered the equity markets and this trend is expected to continue.
Story first published: Friday, October 21, 2022, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X