உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரெசசனை எதிர்கொள்ளலாம் என தொடர்ந்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அண்டை நாடுகளின் மந்த நிலையால் இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார சரிவுக்கு மத்தியில், ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது.

செலவு அதிகரிக்கலாம்
விரைவில் அமெரிக்காவில் ரெசசன் பிரச்சனை வரலாம் என்ர நிலையில், அங்கு பணவீக்கமும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக மக்களின் வாழ்வாதார செலவினங்களும் அதிகரிக்கலாம். இது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் செலவை வழிவகுக்கலாம்.

வாடகை அதிகரிப்பு
கல்வி கட்டணம் மட்டும் அல்ல, வீட்டு செலவினங்களும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் ரூமுக்கு வாடகை மற்றும் மற்ற செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களும், ஊழியர்களும் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

வேலை கிடைப்பதில் சிக்கல்
ஏற்கனவே ரெசசன் காரணமாக அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் தொடங்கி பலரும் பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அவர்கள் புதிய வேலை கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். அதேபோல மாணவர்களும் புதிய வேலைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இது மேற்கொண்டு அவர்களுக்கு பிரச்சனையாக மாறலாம்.

வங்கிக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள்
வெளி நாடுகளில் சென்று படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வங்கி கடன் வாங்கியே படிக்கின்றனர். கல்வி கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அனைத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் கூடுதலாக செலவினங்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம். இது இந்திய மாணவர்களை கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தூண்டலாம்.

இயல்பு நிலை திரும்பலாம்
அமெரிக்கா சென்று படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள், ரெசசன் காரணமாக இன்னும் யோசிக்கலாம். எனினும் இது தற்காலிகமானதே. ஆக ஊழியர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது விரைவில் மாறலாம். தற்போது அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. பணவீக்கமும் சரியத் தொடங்கியுள்ளது. இது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் குறையலாம். இது மேற்கொண்டு வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

சில்லறை பணவீக்கம் அதிகரிக்கலாம்
ரெசசன் காரணமாக வட்டி விகிதம் அதிகரிக்க தூண்டலாம். இதன் காரணமாக டாலரின் மதிப்பு அதிகரிக்கலாம். இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சில்லறை பணவீக்கத்தில் தாக்கத்தினை தூண்டலாம். இது இந்தியாவுக்கு இறக்குமதிக்கு செலவினை அதிகரிக்கலாம். இந்த பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகின்றது.

முதலீடுகள் குறையலாம்
வட்டி விகிதம் அதிகம் என்பதால் அமெரிக்காவில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் முதலீடுகள குறைக்க வழிவகுக்கலாம். குறிப்பாக இந்திய ஸ்டார்ட் அப்கள், யூனிகான்களில் முதலீடு குறையலாம். இது ஸ்டார்ட் அப்களில் மேற்கொண்டு பணி நீக்கத்தினை தூண்டலாம்.

வட்டியை அதிகரிக்க வழிவகுக்கலாம்
மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கும்போது, வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது வங்கிகளில் கடன் விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது மாத தவணையை அதிகரிக்க தூண்டலாம். வணிக கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க தோன்றலாம்.