இந்தியா - ஆஸ்திரேலியா: புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் மீது வரி நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா தொடர்ந்து ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இதற்கு உறுதுணையாக உலக நாடுகள் உடன் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் அதாவது, இரு நாடுகள் மத்தியில் எவ்விதமான தடைகள் இல்லாமல் அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்து வருகிறது.

சமீபத்தில் இந்தியா ஐக்கிய இரு நாடுகள் உடன் வர்த்தக 100 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை உருவாக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்று ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மத்தியில் பொருளாதார மற்றும் வர்த்தக நட்புறவை அதிகரிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இந்த முக்கியமான நிகழ்வின் போது வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மத்தியில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் டெஹானுடன் ஆகியோர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் 27 பில்லியன் டாலராக இருக்கும் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டில் 45 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.

ஏற்றுமதி அதிகரிப்பு
 

ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டணி இந்த ஒப்பந்தம் மூலம் கூடுதலாக வலிமை அடைய உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 12 மாதங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் முலம் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பியூஷ் கோயல் கூறினார்.

வரி நீக்கம்

வரி நீக்கம்

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 85 சதவீத பொருட்களின் மீதான வரி நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும் 12.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பொருட்களின் அளவு 91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

இதில் முக்கியமாகச் செம்மறி ஆடு இறைச்சி, கம்பளி, தாமிரம், நிலக்கரி, அலுமினா, புதிய ஆஸ்திரேலியா ராக் லோப்ஸ்டர் மற்றும் இந்தியாவிற்கான சில முக்கியமான கனிமங்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் மீதான வரிகள் நீக்கப்பட உள்ளது.

96 சதவீத இந்திய பொருட்கள்

96 சதவீத இந்திய பொருட்கள்

இதேபோல் இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்களின் அளவு 96 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India - Australia trade pact: bilateral trade will boost to 45 billion USD

India - Australia trade pact is win-win situation for both countries, bilateral trade will boost 27 billion USD trade to 45 billion USD in next five years. 80-90 percent goods tax will be removed. ஹலோ ஆஸ்திரேலியா.. புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் மீது வரி நீக்கம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X