GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 7.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை வெளியிட்ட முதல் முன்கூடிய கணிப்பில் தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரெசிஷன் நேரத்தில் இப்படி ஒரு கம்பெனியா? 52 மாத சம்பளம் போனஸ்.. அசந்துபோன ஊழியர்கள்! ரெசிஷன் நேரத்தில் இப்படி ஒரு கம்பெனியா? 52 மாத சம்பளம் போனஸ்.. அசந்துபோன ஊழியர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, தொடர்ந்து நிலவும் சர்வதேச பிரச்சனைகள் மற்றும் உலகளாவிய நிதி நிலைமையின் மோசமான நிலை காரணமாக, நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதமாகக் குறைத்துக் கணித்திருந்தது.

GDP வளர்ச்சி

GDP வளர்ச்சி

இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. இதில் மூன்றாவது காலாண்டில் 4.4 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம்

தேசிய புள்ளியியல் அலுவலகம்

இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை வெளியிட்ட முதல் முன்கூடிய கணிப்பில் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

டிமாண்ட் மற்றும் முதலீடு

டிமாண்ட் மற்றும் முதலீடு

இந்தியாவின் டிமாண்ட் அளவை கணிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும் Private final consumption expenditure 2022-23 ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதமாக உயரும் எனக் கணித்துள்ளது. இதேபோல் முதலீட்டுக்கான மொத்த நிலையான மூலதன உருவாக்கம், முதலீட்டின் அளவீட்டை கணிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும் Gross fixed capital formation 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 11.5% உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானம்

மொத்த தேசிய வருமானம்

மேலும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் அளவீட்டில் 2022-23 ஆம் நிதியாண்டில் 1,11,807 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 1,05,955 கோடி ரூபாயாகவும், 2020-21 ஆம் நிதியாண்டில் 98,629 கோடி ரூபாயாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

விவசாயத் துறை

விவசாயத் துறை

2022 ஆம் நிதியாண்டில் நாட்டின் விவசாயத் துறை உற்பத்தி 3% வளர்ச்சியடைந்த பிறகு 2023 ஆம் நிதியாண்டில் 3.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கம் மற்றும் குவாரி

சுரங்கம் மற்றும் குவாரி

இதேபோல் சுரங்கம் மற்றும் குவாரிகள் பிரிவு 2022 ஆம் நிதியாண்டில் சுமார் 11.5% வளர்ச்சியடைந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 2.4% மட்டுமே வளர்ச்சி அடையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

2022 ஆம் நிதியாண்டில் உற்பத்தி துறை வளர்ச்சி 9.9% அடைந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 1.6% ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கட்டுமான வளர்ச்சி FY22 இல் 11.5% இலிருந்து FY23 இல் 9% ஆகக் குறையலாம்.

சேவை துறை

சேவை துறை

வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் தொடர்பான சேவைகள் 2022 ஆம் நிதியாண்டில் 11% வளர்ச்சி அடைந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 13.7% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

மேலும் நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 2022 ஆம் நிதியாண்டில் 4.2% ஆக இருந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 6.4% வளர்ச்சியைக் காணலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India GDP may grow 7 percent in FY23 says National Statistical Office beats RBI data

India GDP may grow 7 percent in FY23 says National Statistical Office beats RBI data
Story first published: Friday, January 6, 2023, 20:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X