இதுதான் இந்தியா.. 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்.. ஆக்ஸ்பாம் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

அதே சமயம் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் இருரக்கும் 50 சதவீதம் மக்களிடம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று புதிய ஆய்வுகள் உண்மை உடைத்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் WEF அமைப்பின் உரிமைக் குழுவான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையின் இந்தியா அறிக்கையை வெளியிட்டது.

முகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பிடிக்க வாய்ப்பு..! எப்படி..?முகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பிடிக்க வாய்ப்பு..! எப்படி..?

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள இந்த முக்கியமான வருடாந்திர சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் மீது 5 சதவீத வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கௌதம் அதானி 2017-2021 வரையிலான காலக்கட்டத்தில் பெறப்பட்ட ஆதாயங்களுக்கு ஒரு முறை வரி விதித்தாலே 1.79 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட முடியும். இதை வைத்து நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் துவக்கபள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு வருட சம்பளத்திற்குப் போதுமான நிதியாக இருக்கும்.

2 சதவீதம் வரி

2 சதவீதம் வரி

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக 40,423 கோடி ரூபாய் அளவிலான தேவைப்படும் நிதியை திரட்ட முடியும் எனச் 'சர்வைவல் ஆஃப் தி ரிச்சஸ்ட்' என்ற அறிக்கையில் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளது ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்.

டாப் 10 கோடீஸ்வரர்கள்

டாப் 10 கோடீஸ்வரர்கள்

நாட்டில் உள்ள டாப் 10 கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் மீது ஒரு முறை 5 சதவீத வரி விதிக்கப்பட்டால் 1.37 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும். இது 2022-23 ஆம் ஆண்டிற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ. . 3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதி தேவையை விட 1.5 மடங்கு அதிக நிதியை திரட்ட முடியும்.

பாலின சமத்துவமின்மை

பாலின சமத்துவமின்மை

பாலின சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்துள்ளத ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் தனது ஆய்வறிர்ரையில் ஒரு ஆண் ஊழியர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் பெண் தொழிலாளர்கள் 63 பைசா மட்டுமே சம்பாதிப்பதாக இந்த அறிக்கை கூறப்பட்டு உள்ளது.

வருமான வித்தியாசம்

வருமான வித்தியாசம்

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு, வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது. உயர் சமூகக் குழுக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பட்டியலிடப்பட்ட சாதியினர் 55 சதவிகிதம் மட்டுமே சம்பாதித்தது வருகின்னர். 2018 மற்றும் 2019 க்கு இடையில் நகர்ப்புற தொழிலாளர் வருவாயில் 50 சதவீத பணத்தை மட்டுமே கிராமப்புறத் தொழிலாளர்கள் சம்பாதித்தனர்.

சொத்து மதிப்பு 121% வளர்ச்சி

சொத்து மதிப்பு 121% வளர்ச்சி

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நவம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு 3,608 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's inequality report: 1% richest hold 40 percent wealth; lowest half people holds just 3 percent wealth

India's inequality report: 1% richest hold 40 percent wealth; lowest half people holds just 3 percent wealth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X