சீனாவை சமாளிக்க அதிரடி திட்டம்.. கூட்டணி சேரும் இந்தியா+ஜப்பான்+ஆஸ்திரேலியா.. செம டிவிஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு புறம் வல்லரசு நாடான அமெரிக்காவோடு பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது.

போதாக்குறைக்கு தற்போது இந்தியாவுடன் எல்லை பிரச்சனையினால், அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறது,

அமெரிக்கா இந்தியா மட்டும் அல்ல, ஆஸ்திரேலியா, ஜப்பான் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சீனாவுக்கு பாதிப்பு அல்ல

சீனாவுக்கு பாதிப்பு அல்ல

இப்படி ஒவ்வொரு புறமும் பிரச்சனைகளை சந்தித்து வரும் சீனாவினை எதிர்கொள்ள இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் நிச்சயம் முடியாது. ஏன் சீனா வேண்டாம். சீன பொருட்கள் வேண்டாம் என இந்தியாவே தவிர்த்தாலும், உலகின் இரண்டாவது பொருளாதாரமாக விளங்கும் சீனாவுக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல.

இந்தியாவின் பங்கு குறைவு தான்

இந்தியாவின் பங்கு குறைவு தான்

ஏனெனில் சீனாவின் மொத்த வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு என்பது மிகக் குறைவு தான். அதோடு பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, ராணுவம் என அனைத்திலும் சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பங்கு மிக குறைவு தான். இதன் காரணமாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை சீனாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக கூட்டணி சேர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவை சமாளிக்க அதிரடி திட்டம்

சீனாவை சமாளிக்க அதிரடி திட்டம்

அதோடு விநியோக சங்கிலி மறுசீரமைப்பு முன் முயற்சியை தொடங்குவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இது பெய்ஜிங்கின் ஆக்கிரோஷமான அரசியல் மற்றும் இராணுவத்தினை சமாளிக்க இந்த கூட்டணி உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முதலாக ஜப்பானால் இந்த முயற்சி, தற்போது வடிவம் பெற்றுள்ளது.

சீனாவுக்கு எதிராக கூட்டணி

சீனாவுக்கு எதிராக கூட்டணி

இந்த மூன்று நாடுகளின் கூட்டணியானது, வர்த்தகம் மற்றும் வர்த்தக அமைச்சர்களின் முதல் கூட்டத்தினை, அடுத்த வாரத்திற்குள் நடந்த தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் தனது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் மூலம், சமீபத்தியில் இந்தியாவினை அணுகியது. அதோடு இதனை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டிய அவசரத்தினை வலியுறுத்தியது.

இந்தியாவும் தீவிரம்

இந்தியாவும் தீவிரம்

டோக்கியோ நவம்பர் மாதத்திற்குள் SCRI தொடங்க ஆதரவாக இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில், சீனாவின் ஆக்கிரோஷமான நகர்வுகளின் வெளிச்சத்தில் இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தினை மிக தீவிரமாக நகர்த்தி வருகிறது. இதுபோன்ற எந்தவொரு திட்டதையும் புது டெல்லி எச்சரிக்கையுடன் பரீசிலிக்கும் என்று இதையறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசின் பல அதிரடி திட்டங்கள்

அரசின் பல அதிரடி திட்டங்கள்

உலகளாவிய விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாக மாற அரசாங்கம் மிக உயர்ந்த மட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பல அதிரடியான திட்டங்களையும் காண முடிகிறது. இது சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவில் கூட பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இந்தியா உலகிற்காக உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும்

இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும்

மேலும் நாம் எவ்வளவு காலம் தான் மூலப்பொருட்களை இறக்குமதி செய்தும், அதை கொண்டு தயாரித்து முடிக்கப்பட்ட முழுமையான பொருளை ஏற்றுமதி செய்து கொண்டும் இருக்க முடியும். இந்த சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரமும் வந்துவிட்டது. இந்தியாவே அனைத்தையும் தயாரிக்க வேண்டும்.

மேக் ஃபார் வேர்ல்ட்

மேக் ஃபார் வேர்ல்ட்

அது மட்டுமல்ல, நாம் வளரும் போது உலகிற்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். உலகளாவிய வணிகங்கள் இப்போது இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதால், மேக் இன் இந்தியா, மேக் ஃபார் வேர்ல்ட் என்ற மந்திரத்தில் நாடு செயல்பட வேண்டும். அன்னிய நேரடி முதலீடு (FDI) அனைத்து பதிவுகளையும் முறியடித்தது. அன்னிய நேரடி முதலீட்டில் 18% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் மோடி கூறியிருந்தார்.

முதலீடுகள் அதிகரிப்பு

முதலீடுகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவே கூட, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இது சர்வதேச நாடுகள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்று எனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும் விவசாயத்திலும் விவசாயிகளிடமும் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

 

சீனாவுக்கு பாதிப்பு தான்

சீனாவுக்கு பாதிப்பு தான்

இதற்கிடையில் இந்த மூன்று நாடுகளின் கூட்டணியானது நிச்சயம் சீனாவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது வர்த்தக ரீதியாக மட்டும் அல்ல, பொருளாதார ரீதியிலாகவும் இந்த நாடுகள் முன்னேற வழிவகுக்கும். இதனால் சீனாவின் சார்பு குறையும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்ககூடும். இது எல்லாவற்றையும் விட, இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் இந்த மூன்று நாடுகளின் கூட்டணியானது இதோடு முடிவடைந்து போக போவதில்லையாம்.

இன்னும் தொடரும்

இன்னும் தொடரும்

ஏனெனில் வெற்றிகரமாக இதனை தொடங்கிய பின்னர் இன்னும் பல ஆசிய நாடுகளையும் இந்த சங்கத்தில் சேர்க்க திட்டமிட்டடுள்ளதாகவும் இது குறித்து வெளியான ஆங்கில செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே ஜப்பான் அந்த நாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற 2 பில்லியன் டாலர் ஊக்கத் தொகையினை அளித்துள்ளது. இது போல அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், பல அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India- japan- Australia countries plans to counter china

India- japan- Australia countries plans to counter china, india working on supply chain with japan, Australia also counter china.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X