சீன ஏற்றுமதி வர்த்தகத்தை கைப்பற்ற திட்டமிடும் இந்தியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநிலமாகக் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிவருவது போல் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பாதிப்பு முழுமையாக முடிந்த பின்பு சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை இந்தியா கைப்பற்ற வேண்டும் எனத் திட்டம் தீட்டி வருகிறது.

அட இது செம நியூஸ் ஆச்சே.. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.14 ஆக அதிகரிப்பு.. என்ன காரணம்..!

சீன ஏற்றுமதி

சீன ஏற்றுமதி

கொரோனா-க்குப் பின் இந்தியா அதிகளவில் இறக்குமதியைக் குறைத்துவிட்டு, குறிப்பாகச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தைக் கைப்பற்றும் வகையில் இந்தியாவில் பன்னாட்டுத் தேவை மற்றும் தரத்திற்கு இந்தியாவில் பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டம் தீட்டி வருகிறது.

நுகர்வோர்கள்

நுகர்வோர்கள்

தற்போது சீனாவிற்கு எதிராகப் பல வல்லரசு நாடுகள் வர்த்தக முடிவுகளை எடுத்துள்ள நிலையில், இந்த வெற்றிடத்தை இந்தியா நிரப்ப முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தற்போது சீனாவை விடுத்து மாற்று வினியோகஸ்தர்களைத் தேடி வரும் நிலையில் இதையும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காகக் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீ அமைச்சகம் திட்டம் தீட்டி வருகிறது.

முக்கியத் துறை
 

முக்கியத் துறை

தற்போது சந்தையில் செய்யப்பட்டுள்ள ஆய்வின் படி, நுகர்வு துறை, மருத்து ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் மற்றும் விளையாட்டுப் பொம்மைகள் தான் முக்கியத் துறைகளாகக் கவனிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் இத்துறையில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்து ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தரத்தை உயர்த்தி, வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசு செய்ய உள்ளது.

இதன் பின்பு அடுத்த 3 மாத காலத்தில் ரத்தின கல் மற்றும் நகைகள், மருந்துகள் மற்றும் ஸ்டீல் பொருட்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளை ஊக்குவிக்கும் பணிகளைச் செய்யத் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

3 துறைகள்

3 துறைகள்

இத்திட்டங்கள் குறித்த மத்திய காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீ துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உணவு துறை

உணவு துறை

தற்போது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பல நாடுகளில் உணவு, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் முதலில் உணவு துறை பொருட்களை ஏற்றுமதி செய்தால் நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் எனப் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India maps out post-Covid export plan to take on China

India has begun work on a continuity plan to kick-start exports once the country emerges from the shadows of the Covid-19 pandemic. The plan includes cutting down import dependence, especially from China, by focussing aggressively on substitution while improving safety compliance and quality goods to gain global market share.
Story first published: Thursday, April 30, 2020, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X