இந்தியாவை டார்கெட் செய்யும் உலக நாடுகள்.. விரைவில்100 பில்லியன் டாலர் FDI..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், நிபுணர்கள் விரைவில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என்றும் கணித்துள்ளன.

 

இதற்கிடையில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது.

இதற்கிடையில் சமீபத்திய வாரங்களாக இந்தியா பங்கு சந்தையில் முதலீடுகள் என்பது கணிசமான அதிகரித்துள்ளது.

13 நாடுகளில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வீட்டின் விலை.. இந்தியாவில் எவ்வளவு? 13 நாடுகளில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வீட்டின் விலை.. இந்தியாவில் எவ்வளவு?

 அன்னிய முதலீடுகள் அவசியம்

அன்னிய முதலீடுகள் அவசியம்

இது மட்டும் அல்ல, அன்னிய நேரடி முதலீடுகளும் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்திற்கு உள்நாட்டு முதலீடுகள் என்பது போதுமானவையாக இருக்காது. இந்தியாவின் வளர்ச்சியினை மேம்படுத்த அன்னிய மூலதன முதலீடுகள் அவசியமான ஒன்றாகும்.

சீனாவின் வளர்ச்சி - FDI

சீனாவின் வளர்ச்சி - FDI

இந்தியாவின் எஃப் டி ஐ விகிதமானது ஜிடிபியில் பல தசாப்தங்களாகவே 2.5% குறைவாகவே இருந்து வருகின்றது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு சீனாவின் வளர்ச்சியானது உச்சத்தில் இருந்தபோது, 4% ஆக இருந்தது. ஆக இந்த விகிதமானது மேற்கொண்டு அதிகரிக்க வேண்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிடிபி  - எஃப்டிஐ
 

ஜிடிபி - எஃப்டிஐ

உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கும் FDI விகிதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் எஃப் டி ஐ ஆனது ஜிடிபியினை சார்ந்து இல்லை. எஃப் டி ஐ அதிகமாகி இருந்திருந்தால் ஜிடிபி அதிகரித்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா Vs  இந்தியா

சீனா Vs இந்தியா

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் 2021 - 22ல் எஃப் டி ஐ விகிதமானது, 83.57 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவில் இதே காலகட்டத்தில் 180 பில்லியன் டாலரகளுக்கும் மேலாக இருந்தது. இந்தீயாவினை விட சீனாவின் எஃப் டி ஐ விகிதமானது இருந்தாலும், இந்தியாவில் முந்தைய ஆண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் எஃப் டி ஐ விகிதமானது 475 பில்லியன் டாலர்களை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது பி எல் ஐ திட்டம் உள்ளிட்ட பல ஊக்குவிப்பு திட்டங்களின் காரணமாக , இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தஉலகின் ஐந்தாவது பொருளாதாரமாக இங்கிலாந்தை இந்தியா விஞ்சியது. இது விரைவில் அடுத்தடுத்த இடங்களுக்கும் முன்னேறும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

பல நிறுவனங்கள் முதலீடு

பல நிறுவனங்கள் முதலீடு


இந்தியாவின் பி எல் ஐ திட்டத்தின் மூலம் விஸ்ட்ரான், டெல், லாவா, டிக்சான், ஃபாக்ஸ்கான், சிஸ்கோ, நோக்கியா, எரிக்சன் உள்ளிட்ட பல நிறுவனங்களும் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

தற்போது சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அங்கு கொரோனா லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் இருந்து ஏற்கனவே பல நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை நிறுத்த தொடங்கியுள்ளன.

சீனாவும் ஒரு காரணம்

சீனாவும் ஒரு காரணம்

இதில் பல நிறுவனங்களும் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவினை எதிர் நோக்கியுள்ளன. இதற்கிடையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் இந்திய சந்தையினை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுகின்றன. இதுவும் மேற்கோண்டு இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

இந்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்

இந்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய முதலீடுகளை அதிகரிக்க பல்வேறு விதிமுறைகளை திருத்தம் செய்துள்ளது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றது. இது மேற்கொண்டு அன்னிய முதலீடுகளை ஊக்விக்கலாம்.

எஃப்டிஏ ஒப்பந்தம்

எஃப்டிஏ ஒப்பந்தம்

இது தவிர இந்தியா தற்போது பற்பல நிறுவனங்களுடன் எஃப் டி ஏ ஒப்பந்தங்களை சில நாடுகளுடன் செய்துள்ளது. இது மேற்கொண்டு இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்ரது. இது மேற்கொண்டு இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india may attract $100 billion in FDI annually in the next 3 to 5 year

India's FDI is expected to attract $475 billion over the next 5 years. Investments in India have increased due to many incentive programs like PLI scheme.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X