இந்தியாவோடு போட்டி போடும் வியட்நாம்! நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க - சீன பிரச்சனையாகட்டும், கொரோனா வைரஸ் தாக்கமாக இருக்கட்டும், இவை எல்லாவற்றினையும் மீறி ஒரு நல்ல விஷயம் இந்தியாவுக்கு நடந்தது எனில், அது சீனாவினை விட்டு வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர ஆர்வம் தெரிவித்தது தான்.

குறிப்பாக சீனாவில் இயங்கி வரும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற தயாராகி வருகின்றன.

அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்தியாவின் கதவையும் தட்டின. இது குறித்து 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்தியாவுக்கு சவால்விடும் வியட்நாம்

இந்தியாவுக்கு சவால்விடும் வியட்நாம்

இதில் குறைந்தபட்சம் 300 நிறுவனங்களாவது இந்தியாவுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டது. இது பல தரப்பிலும் நல்ல வரவேற்பினை பெற்றது எனலாம். ஆனால் தற்போது எதிர்பார்ப்பு மாறாக வியட்நாம் தான் அதிகளவிலான நிறுவனங்களை கவரலாம் என்கின்றனர்கள் நிபுணர்கள். வியட்நாம் அளவில் சிறிய நாடாக இருந்தாலும், இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி உள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சி

ஏற்றுமதி வளர்ச்சி

கடந்த 2019ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 5% தான். ஆனால் அதே காலத்தில் வியட்நாமின் வளர்ச்சி 18% ஆகும். இதே காலக்கட்டத்தில் வியட்நாமின் வர்த்தக உபரி 47 பில்லியன் டாலர் ஆகும். ஆனால் இந்தியாவோ வர்த்தக பற்றாக்குறையைத் தான் வைத்துள்ளது. 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 156 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

டாப் ஏற்றுமதியாளரான வியட்நாம்

டாப் ஏற்றுமதியாளரான வியட்நாம்

சொல்லப்போனால் 2019ல் டாப் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக வியட்நாம் மாறியுள்ளது. குறிப்பாக மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 41% பங்குடனும், ஆடைகள் 11% பங்குடனும், காலாணிகள் 8%மும், மெஷினரி மற்றும் இயந்திர உபகரணங்கள் 5% ஏற்றுமதியும் பங்கு வகித்துள்ளது. 2019ல் அதன் ஏற்றுமதியில் அதிகளவு மின்சார இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் ஆகும். ஆக மொத்தத்தில் கடந்த 2010ல் 10% இருந்த ஏற்றுமதி, 2019ல் 42% ஆக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மொபைல் தொலைபேசி ஏற்றுமதியும் அதிகம்.

தொழில்நுட்பம் குறைந்த பொருட்கள் ஏற்றுமதி

தொழில்நுட்பம் குறைந்த பொருட்கள் ஏற்றுமதி

வியட்நாம் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏற்றுமதியானது பெரும்பாலும், குறைந்த தொழில் நுட்பம் கொண்ட உற்பத்தி பொருட்களான கணிம எரிபொருட்கள் 14%மும், இதே முத்துக்கள் ``%மும், இயந்திரங்கள் 6%மும், கெமிக்கல்ஸ் 5%மும், வாகனங்கள் 5%மும், ஹைடெக் உற்பத்திக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகவும் இருந்து வருகின்றது.

 ஹைடெக் ஏற்றுமதியில் வியட்நாம் தான் டாப்

ஹைடெக் ஏற்றுமதியில் வியட்நாம் தான் டாப்

ஆனால் வியட்நாம் ஹைடெக் ஏற்றுமதியில் 40% ஆகவும் இந்தியாவினை பொறுத்தவரை இது மிகக்குறைவாகவும் ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2018 நிலவரப்படி வெறும் 9% மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலை, வியட்நாமில்தான் உள்ளது.

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்

கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் வியட்நாம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் படி வியட்நாமில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதலீடு செய்யவும், அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அந்த ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது.

பல மடங்கு வர்த்தகம் அதிகரிப்பு

பல மடங்கு வர்த்தகம் அதிகரிப்பு

இதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கடந்த 2009 - 2018ம் ஆண்டுகளிடையே, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 1.6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இதுவே வியட்நாமின் ஏற்றுமதி 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. ஆக இந்தியாவினை விட வியட்நாம் ஒவ்வொரு வகையிலும் தனது வர்த்தகத்தினை விரிவுபடுத்தி வருவதனையே இது சுட்டிக் காட்டுகிறது.

வரிச்சலுகைகளை அள்ளி வீசிய வியட்நாம்

வரிச்சலுகைகளை அள்ளி வீசிய வியட்நாம்

இந்தியாவில் உள்நாட்டில் தொழில் தொடங்குவதை ஈர்க்க பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடைசியாக மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா வரை வந்து விட்டது இந்தியா. ஆனாலும், சீனா இந்தியா இடையேயான வர்த்தகபோருக்கு மத்தியில், வியட்நாம் வரிச்சலுகைகளை அள்ளி வீசி முதலீடுகளை வளைத்து போட்டு விட்டது.

சீனாவிலிருந்து எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன

சீனாவிலிருந்து எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன

இந்தியா சீன எல்லை பிரச்சனைக்கு மத்தியில், இந்தியா அதன் பாதுகாப்பு கருதி பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது. எஃப்டிஐ விதிகளிலும் மாற்றம் கொண்டு வந்தது. இதற்கிடையில் அமெரிக்கா சீன பிரச்சனையினால், சீனாவில் இருந்து 56 நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இதில் வெறும் எட்டே எட்டு நிறுவனங்கள் தான் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. ஆனால் 26 நிறுவனங்கள் வியட்நாமுக்கு சென்று விட்டன.

கொரோனா நெருக்கடியிலும் ஏற்றுமதி

கொரோனா நெருக்கடியிலும் ஏற்றுமதி

ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனவரி முதல் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி 3% அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி 24% சரிவடைந்துள்ளது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

வியட்நாமின் ஏற்றுமதி

வியட்நாமின் ஏற்றுமதி


கொரோனா தாக்கத்தின் காலத்தில் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் பெரும் தள்ளாட்டத்தை சந்தித்தன. ஆனால் வியட்நாமின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் 18.3 பில்லியன் டாலராக இருந்த வியட்நாமின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 20.8 பில்லியன் டாலராகவும், மார்ச் மாதத்தில் 24.2 பில்லியன் டாலராகவும், ஏப்ரல் 17.6 பில்லியன் டாலராகவும், மே மாதத்தில் 19.4 பில்லியன் டாலராகவும், ஜூன் மாதத்தில் 22.6 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி

இதே இந்தியாவின் ஏற்றுமதியானது ஜனவரி மாதத்தில் 26 பில்லியன் டாலராகவும், பிப்ரவரியில் 27.7 பில்லியன் டாலராகவும், மார்ச் மாதத்தில் 21.5 பில்லியன் டாலராகவும், இதே ஏப்ரல் மாதத்தில் 10.4 பில்லியன் டாலராகவும், மே மாதத்தில் 19.1 பில்லியன் டாலராகவும், ஜூன் மாதத்தில் 21.9 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india missed great business chances

Most of the indicators said Vietnam scores over india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X