15 ஆண்டுகளுக்கு இப்படித் தான்.. விலை உயர்ந்த எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு வெளி நாடுகளில் இருந்து, விலை உயர்ந்த சமையல் எண்ணெய்களை வாங்குவார்கள்.

உள்நாட்டில் இருந்து வரும் உற்பத்தியை விட, தேவை அதிகமாக உள்ளது. ஆக இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எண்ணெய் நுகர்வானது 17 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.

ரூ.1 லட்சம் வரை வருமான வரியில் நிவாரணமா? ஒமிக்ரான் நெருக்கடியில் நல்ல விஷயம் தான்..! #Budget2022 ரூ.1 லட்சம் வரை வருமான வரியில் நிவாரணமா? ஒமிக்ரான் நெருக்கடியில் நல்ல விஷயம் தான்..! #Budget2022

தேவை இருக்கலாம்

தேவை இருக்கலாம்

இந்தியாவினை பொறுத்தவரையில் உள்நாட்டில் உற்பத்தி விகிதமானது 2021 - 2022ல் 10 மில்லியன் டன்னாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நுகர்வானது 23 மில்லியன் டன்னாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் கவனம்

விவசாயிகள் கவனம்

இந்தியா மிகப்பெரிய இறக்குமதியாளராகும். சர்வதேச அளவில் அதிளவில் வெஜிடபிள் ஆயில் இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும். இந்திய விவசாயிகள் பருத்தி, நெல், கரும்பு, கோதுமை போன்ற பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் இவற்றில் சில வற்றிற்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றையும், நலத்திட்டங்களுக்காக அரசே கொள்முதலும் செய்கின்றது.

விவசாயிகள் ஆர்வம்
 

விவசாயிகள் ஆர்வம்

இந்தியாவினை பொறுத்தவரையில் எண்ணெய் வித்துகளுக்கு ஊக்கத் தொகைகள் பெரியதாக இல்லை. ஆக உற்பத்தியாளர்கள் எண்ணம் உடனடியாக மாறபோவதில்லை. அதிக மகசூல் மற்றும் நல்ல விலை கிடைத்தால் அவற்றில் விவசாயிகள் ஆர்வம் காட்டலாம் என நேஷனல் கமாடிட்டீஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிராஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

கடுகு & வேர்க்கடலை உற்பத்தி

கடுகு & வேர்க்கடலை உற்பத்தி

பயிர் சுழற்சியினை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களில் நெல் உற்பத்தியாளர்களை சூரியகாந்தி பயிரிட ஊக்குவிக்க வேண்டும். கோதுமை உற்பத்தியாளர்களை கடுகு உற்பத்திக்கு ஊக்குவிக்க வேண்டும். நெல் உற்பத்தியினை தவிர்த்து எண்ணெய் உற்பத்தியினை செய்யும் வேர்க்கடலையை ஊக்குவிக்க வேண்டும்.

பாமாயில் உற்பத்தி

பாமாயில் உற்பத்தி

பாமாயில் உற்பத்தியினை ஊக்குவிக்கலாம். இது தேவையினை சற்று மிதப்படுத்தலாம். அதேபோல சோயாபீன் இறக்குமதியினை தவிர்த்து, சோயபீன்ஸை வாங்கி உற்பத்தியை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். சமையல் எண்ணெய் என்பது உணவின் ஒரு முக்கியமாக இருக்கும். விருந்துகளில், முக்கிய பலகார உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதிக தேவைக்கு மத்தியில் இந்தியாவில் கடந்த ஆண்டினை காட்டிலும் 24% விலை அதிகரித்துள்ளது என புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்த விலையேற்றம் வந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகப்படியான தேவைக்கு மத்தியில், 2026ம் ஆண்டில் 1 மில்லியன் டன்னாகவும், 2030ல் 2.8 மில்லியன் டன் அல்லது 3,00,000 டன்னாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india's cooking oil imports may climb seen lasting for 15 years

India's cooking oil imports may climb seen lasting for 15 years/15 ஆண்டுகளுக்கு இப்படித் தான்.. விலை உயர்ந்த எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம்..!
Story first published: Tuesday, January 25, 2022, 17:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X