இனியும் லாக்டவுன் தொடர்ந்தால்.. இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது மிக மோசமான நிலையிலேயே இருந்தது.

இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..!
 

அதை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்த ஆண்டு அதிகரித்தது.

அதோடு முக்கிய எட்டு முக்கியத் தொழிற்துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் கடந்த ஆண்டு 5.2% குறைந்தது. இது கடந்த 14 ஆண்டுகளில் மோசமான வீழ்ச்சியாகும்.

இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..!

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் தான் தொழில்துறை முடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தான் சற்று மீண்டு வரத் தொடங்கியிருந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் அரக்கனால் மீண்டும் பொருளாதாரம் பாதாளம் நோக்கி பாய ஆரம்பித்துள்ளது.

 பொருளாதாரம் இன்னும் மோசமாகலாம்

பொருளாதாரம் இன்னும் மோசமாகலாம்

ஆக இந்த கொடிய வைரஸின் காரணமாக, ஏற்கனவே மந்தமாக இருந்த பொருளாதார நிலையை இது இன்னும் மோசமடைய செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை, கொரோனாவினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக அமைதியின்மை அதிகரிக்கும்
 

சமூக அமைதியின்மை அதிகரிக்கும்

இந்த நிலையில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜூன் ட்ரெஸ், இந்தியா மற்றும் உலகளாவிய லாக்டவுன் தொடர்ந்தால், பொருளாதாரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். அதிலும் இந்தியாவில் ஏற்கனவே ஊரடங்கின் காரணமாக சமூக அமைதியினை அதிகரிக்கும். ஏற்கனவே சில பகுதிகளில் இது தொடங்கி விட்டது என்றும் கூறியுள்ளார்.

நிலை நீடித்தால் பொருளாதாரம் என்னவாகுமோ?

நிலை நீடித்தால் பொருளாதாரம் என்னவாகுமோ?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் 21 நாள் ஊரடங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் அரசு நினைக்கிறது. ஆனால் இந்த நிலை நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். அப்படி இல்லையென்றாலும் கூட உலகளாவிய மந்த நிலையானது, இந்தியாவிலும் எதிரொலிக்க கூடும்.

இது மட்டும் வளர்ச்சி காணும்

இது மட்டும் வளர்ச்சி காணும்

கொரோனாவினால் பல துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்படி ஒரு நெருக்கடியிலும் கூட மருத்துவ பராமரிப்பு போன்ற பகுதிகள் வளரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையினால் பல துறைகள் நல்ல முறையில் வளராவிட்டாலும் செழிக்க முடியாது.

பாதிப்பு தான்

பாதிப்பு தான்

உதாரணத்திற்கு உங்களது இரு சக்கர வாகனத்தில் ஒரு டயர் பஞ்சர் ஆகினாலும், நாம் வாகனத்தினை இயக்க முடியாது. அதே போலத் தான் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் வீழ்ச்சியில் உள்ள நிலையில், ஒரு சில துறைகள் வளர்ச்சி கண்டாலும் அதையும் சேர்த்துக் எடுத்துக் கொண்டுள்ளன மற்ற துறைகள்.

மனித வளம் பற்றாக்குறை

மனித வளம் பற்றாக்குறை

21 நாள் ஊரடங்கு நீடிக்கப்படாவிட்டாலும், ஊழியர்கள் தமது சொந்த ஊர்களை விட்டு வெளியேறுவது தற்போதைக்கு சற்று கடினம் தான். இதனால் சில துறைகள் மனித வளம் இன்றி முடங்கலாம். இப்படியாக பலரும் பல தரப்பிலிருந்தும் கூறி வரும் நிலையில், பல தர குறியீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை குறைத்து வருகின்றனர்.

வளர்ச்சி கணிப்பு

வளர்ச்சி கணிப்பு

பிட்ச் ரேட்டிங்ஸ், பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான அளவுக்கு வீழ்ச்சி கண்டு 2% ஆக குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதே ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

ஜிடிபி விகிதம்

ஜிடிபி விகிதம்

இதே சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் & பி குளோபல் இந்தியவின் ஜிடிபி விகிதத்தினை 3.5% ஆக குறைந்துள்ளது. இது முன்பு 5.2% ஆக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மூடிஸ் இண்வெஸ்டார்ஸ் 2020 காலண்டர் ஆண்டில் 2.5% ஆக வளர்ச்சி இருக்கும் என்றும், இது முன்பு 5.3% ஆகவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பாதிப்பு?

எவ்வளவு பாதிப்பு?

கொரோனாவின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்திய பொருளாதாரம் கூட எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்றும் தெரியவில்லை. அதிலும் இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனாவினால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s economic Situation going to very bad If Lock down Continue,

The Indian macroeconomic situation is going to worse, if lockdown continue for some more time.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X