உலகமே பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. உணவு பொருட்கள் விலை, எரிபொருள் விலை என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
தொடர்ந்து பணவீக்கமானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக வட்டி விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இதனால் வீட்டு கடன், வாகன கடன், தனி நபர் கடன் என பலவற்றிற்கும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

செலவினங்கள் அதிகரிப்பு
மேக்ரோ பொருளாதார நாடுகளில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அவற்றுடன் ஒப்பிடும்போதும் இந்தியாவில் வளர்ச்சியானது பரவாயில்லை எனலாம்.
சமீபத்திய எஸ் பி ஐ ஈகோரப் அறிக்கையின் படி, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் வாழ்க்கை செலவினங்களை ஒப்பிடும்போது, மற்ற நாடுகளில் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு?
இந்த செலவின அதிகரிப்பில் செப்டம்பர் 2021 நிலவரப்படி, வாழ்க்கை செலவினங்கள் 100 ரூபாயாக இருந்தால், இதில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 12 ரூபாய் அதிகரித்துள்ளது எனில், ஜெர்மனியில் 20 ரூபாயும், இங்கிலாந்தில் 23 ரூபாயும் அதிகரித்துள்ளது.

உணவு விலை அதிகரிப்பு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனியை விட, இந்தியா சிறப்பாக உள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் விலையானது பரவாயில்லை எனலாம்.
கடந்த செப்டம்பர் 2021ல் நாடு முழுவதும் உனவு செலவினங்கள் 100 ரூபாயாக இருந்த நிலையில், அமெரிக்காவில் 25 ரூபாய், இங்கிலாந்தில் 18 ரூபாய், ஜெர்மனியில் 33 ரூபாயும், இந்தியாவில் 15 ரூபாயும் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை
இதே எரிபொருள் விலை அதிகரிப்பில், அமெரிக்காவில் 12 ரூபாயும், இங்கிலாந்தில் 93 ரூபாயும், ஜெர்மனியில் 62 ரூபாயும், ஜெர்மனியில் 16 ரூபாயும் அதிகரித்துள்ளது.

வீட்டு வசதி
இந்த வீட்டுவசதி குறித்தான சிபிஐ குறித்தான விகிதம், அமெரிக்காவில் 21 ரூபாயும், இந்தியாவில் 6 ரூபாயாகவும், இங்கிலாந்தில் 30 ரூபாயாகவும், ஜெர்மனியில் 21 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தனி நபர் வருமானம்
தனி நபர் வருமானம் என எடுத்துக் கொண்டால், கடந்த 8 ஆண்டில் தனி நபர் வருமானம் என்பது 57% உயர்ந்துள்ளது. இது மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக இருந்தாலும், இங்கு செலவினங்களும் குறைவு என்பதால் அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது எனலாம்.
மொத்தத்தில் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா என்ற இளையராஜாவின் பாட்டுக்கு ஏற்ப, அண்டை நாடுகள் என்ன தான் சொர்க்கமாக இருந்தாலும், அது நம் நாட்டிற்கு ஈடு இணை ஆக முடியாது.