சீனாவை ஓரம்கட்டிய இந்தியா.. உறுதிப்படுத்திய நிர்மலா சீதாராமன்..!! #NRI

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றால் மிகையில்லை, இந்திய அரசின் அந்நிய செலாவணி இருப்பை மேம்படுத்துவதில் NRI பங்கு மிகவும் முக்கியமானது என்றால் மிகையில்லை.

 

பொதுவாக வெளிநாட்டில் வாழும் மக்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணத்தை Remittances என அழைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எந்த நாடு அதிக Remittances தொகையைப் பெறுகிறது என்ற கணக்கெடுப்பு நடக்கும், அந்த வகையில் எப்போதும் இந்தியாவுடன் போட்டிப்போடும் சீனா இந்த முறை 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

இதனால் உலகிலேயே அதிக Remittances தொகை பெற்ற நாடாக இந்தியா உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் முதல் முறையாக ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்தியா Remittances ஆகப் பெற்றுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரம் சரிவு..! அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரம் சரிவு..!

100 பில்லியன் டாலர்

100 பில்லியன் டாலர்

2022 ஆம் ஆண்டில் இந்தியாலின் ரெமிட்டன்ஸ் தொகை 100 பில்லியன் டாலரை தாண்டும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே கணிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது நிர்மலா சீதாராமன் இதை உறுதி செய்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 2022 ஆம் ஆண்டிற்குச் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எட்டியுள்ளது. இது கடந்த வருட அளவை காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

பட்ஜெட் 2023
 

பட்ஜெட் 2023

இந்தியாவின் நிதி பற்றாக்குறை அளவை சமாளிப்பதில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 2022 ஆம் ஆண்டிற்குச் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எட்டியுள்ளது மூலம் ரூபாய் மதிப்பின் சரிவை காப்பாற்றியது மட்டும் அல்லாமல் அந்நிய செலாவணி குறைப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இது நிதி பற்றாக்குறை அளவிலும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் (PBD) மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளிநாடுகளில் இருக்கும் NRIகளை "இந்தியாவின் உண்மையான தூதர்கள்" என்று பாராட்டினார்.

 NRI மக்கள்

NRI மக்கள்

மேலும் NRI-கள் முடிந்தவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தனிப்பட்ட பிராண்ட்-கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுப் புதிய வர்த்தகத்தை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

சீனா, ஐரோப்பா

சீனா, ஐரோப்பா

அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகப் போருக்கு பின்பு சீனாவுக்கு மாற்றாக ஒரு நாடு வேண்டும் என்ற கருத்து உலகம் முழுவதும் உருவானது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் இந்தக் கூட்டத்தில் சீனா பிளஸ் ஒன் கொள்கையை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளது. இதேபோல் சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் (EU) பிளஸ் ஒன் என்ற கொள்கை குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருகின்றனர் எனக் கூறினார்.

இந்தியா பெஸ்ட் சாய்ஸ்

இந்தியா பெஸ்ட் சாய்ஸ்

சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கக்கூடிய ஒரு சிறந்த நாடாக இந்தியாவை மத்திய அரசு வலுவாகச் சர்வதேச நிறுவனங்கள் மத்தியில் முன்னிறுத்துகிறது என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

இந்திய வல்லுனர்கள்

இந்திய வல்லுனர்கள்

தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், செமிகண்டக்டர் டிசைன், மருந்து உற்பத்தி மற்றும் பிற துறைகளில் இந்திய வல்லுனர்களின் ஆதிக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்தியா அறிவு மற்றும் முன்னேற்றத்தின் உலகளாவிய ஹப் ஆக மாறி வருகிறது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Remittances From NRI crossed 100 billion USD says Nirmala Sitharaman, India beats China

India's Remittances From NRI crossed 100 billion USD says Nirmala Sitharaman, India beats China
Story first published: Wednesday, January 11, 2023, 11:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X