சீனா இறக்குமதி அதிகரிப்பு.. இந்தியா அதிகம் இறக்குமதி செய்த பொருள் எது தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 125 பில்லியன் டாலரை தாண்டியது, இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மட்டும் 100 பில்லியன் டாலரை நெருங்கியது.

 

இது சீனப் பொருட்களை அதிகளவில் நம்பி வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகச் சந்தையின் நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக இயந்திரங்கள் பிரிவில் இந்தியா அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

சீனா-வுக்கு தளர்வா..? மோடி அரசின் திட்டம் என்ன..? யாருக்கெல்லாம் பாதிப்பு..!

 இந்தியா - சீனா

இந்தியா - சீனா

ஜனவரி 14ஆம் தேதி சீன சுங்க பொது நிர்வாகம் (GAC) கடந்த 12 மாதங்களில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகத்தின் நிலையைக் காட்டுகிறது. இந்த அரசு தரவுகளின் படி சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 2019இல் மொத்த இருதரப்பு வர்த்தகத்தை விட அதிகமாக உள்ளது.

 ஏற்றுமதி இறக்குமதி

ஏற்றுமதி இறக்குமதி

2019 இல் சீனா - இந்தியா மத்தியிலான வர்த்தகம் 92.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2020 இல் 87.6 பில்லியன் டாலராகக் குறைந்தது உள்ளது. 2020ல் இதன் அளவு குறைய மிக முக்கியமானக் காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு தான்.

 மருத்துவப் பொருட்கள்
 

மருத்துவப் பொருட்கள்

2021ஆம் ஆண்டில், டிமாண்ட் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது, குறிப்பாக மருத்துவப் பொருட்கள் போன்ற புதிய வகைப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக வர்த்தகம் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 125.6 பில்லியன் டாலரை எட்டியது, இதில் சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 97.5 பில்லியன் டாலராகும்.

 இறக்குமதி 30% அதிகரிப்பு

இறக்குமதி 30% அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி 30% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 28.1 பில்லியன் டாலர் ஆகும், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 56% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறை 69.4 பில்லியன் டாலரை எட்டியது, இது கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019 எண்ணிக்கையிலிருந்து 22% அதிகரித்துள்ளது.

 இரும்பு தாது

இரும்பு தாது

இந்திய சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விபரம் தற்போது கிடைக்காத நிலையில், கடந்த சில வருடங்களில் சீனாவிற்கு இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாக இரும்பு தாது, பருத்தி மற்றும் பிற மூலப்பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

 எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரங்கள்

எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரங்கள்

இதேவேளையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகம் இற்குமதி செய்யப்பட்ட பொருட்களில் எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரங்கள், ஆக்டிவ் பார்மா இன்கிரிடியன்ட்ஸ் (APIகள்), வாகன உதிரி பாகங்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளில் இருந்து PPEகள் வரையிலான மருத்துவப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

 மருத்துவப் பொருட்கள்

மருத்துவப் பொருட்கள்

ஜிஏசி செய்தித் தொடர்பாளர் லி குய்வென் கூறுகையில், 2021 ஆம் ஆண்டில் சீனாவின் மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் லேப்டாப் மற்றும் வீட்டு உபகரணங்கள் 13% அதிகரித்து, "stay at home" உபகரணங்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s trade with China crosses $125 billion, imports near $100 billion

India’s trade with China crosses $125 billion, imports near $100 billion சீனா இறக்குமதி அதிகரிப்பு.. இந்தியா அதிகம் இறக்குமதி செய்த பொருள் எது தெரியுமா..?!
Story first published: Saturday, January 15, 2022, 19:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X