பலத்த அடி வாங்கிய இந்தியா.. ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு வரலாம்.. காரணம் இந்த கொரோனா தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் காரனமாக இந்தியா 10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பினை சந்தித்து வருவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கனால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த புதன் கிழமையன்று, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று நோயின் காரணமாக இந்தியா 10 லட்சம் கோடி வருவாயினை இழக்கும்.

சில மாநிலங்களில் சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமானது என்றும் கட்கரி கூறியுள்ளார்.

வளர்ச்சி இம்புட்டு தான்
 

வளர்ச்சி இம்புட்டு தான்

இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் குறையும் என்று எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீடுகள் கணித்துள்ளது. எவ்வாறயினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 8.5 சதவீதமாகவும், இதே 2020 - 23ம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

பிரச்சனை அதிகரிப்பு

பிரச்சனை அதிகரிப்பு

பல வாரங்களாக நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட நிதி இழப்பினை கட்டுப்படுத்த, அரசு மீண்டும் பொருளாதாரத்தினை திறக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை எனலாம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த, பல மாநிலங்கள் மீண்டும் லாக்டவுனை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கின்றன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த புதன்கிழமையன்று மட்டும் 9,985 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா முழுக்க கொரோனாவின் தாக்கம் 2,86,579- ஐ தொட்டுள்ளது. இதே பலி எண்ணிக்கையும் 8,102 பேராக அதிகரித்துள்ளது. இதே தமிழக்கத்தினை எடுத்துக் கொண்டால் 36,841 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 326 பேராக அதிகரித்துள்ளது.

ஊக்கத்தொகை எவ்வளவு?
 

ஊக்கத்தொகை எவ்வளவு?

இந்திய அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 200 லட்சம் கோடி ரூபாயாகும். அதில் 10 சதவீதம் ஊக்கத்தொகையாக சென்றுள்ளது. சுமார் 20 லட்சம் கோடி ஊக்கத் தொகை தொழில்களுக்கு, விவசாயிகளுக்கும் ஒரு ஊக்கத் தொகையினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இன்னும் 10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்

தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமையை நேர்மறையுடன் கையாள வேண்டும். இது நாம் எதிர்கொள்ளும் கடினமான நேரம். நாங்கள் ஒரு நெருக்கடியான நேரத்தினை எதிர்கொண்டுள்ளோம். எனினும் நாம் அதனை எதிர்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடனும், நேர்மறையுடனும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India starts to loss at Rs.10 lakh crore revenue amid coronavirus outbreak

India starting at Rs.10 lakh crore revenue loss due to covid-19 outbreak even as the country’s economy opens up.
Story first published: Thursday, June 11, 2020, 11:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X