ஜோ பிடன் வெற்றியால் இந்தியா-அமெரிக்கா உறவில் பெரும் மாற்றம்.. சீனாவுக்குச் செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க வரலாற்றில் மிகவும் சரச்சைக்குறிய ஆட்சிக்காலம் என்றால் அது டொனால்டு டிரம்ப்-இன் ஆட்சி காலம் தான். சீனா உடானான வர்த்தகப் போர், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள், வட கொரியா உடனான வாக்குவாதம், இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல சர்ச்சைகளை உருவாக்கி டிரம்ப் ஆட்சியை ஜோ பிடனின் வெற்றி முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

ஜோ பிடன் ஆட்சியில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு எப்படி இருக்கும் என்பது தான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது. காரணம் ஜோ பிடன் அமெரிக்க அதிபராகும் முன்பு பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்த பிடன் பல முறை இந்தியா உடன் அமெரிக்க வலிமையான நட்புறவை வைத்துக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

 

சீனா உடனான எல்லை பிரச்சனை, பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் Generalised System of Preferences (GSP) தகுதி நீக்கம் எனப் பல பிரச்சனைகளை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில் ஜோ பிடன் தலைமையிலான ஆட்சியில் இந்திய - அமெரிக்க நட்புறவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..!

ஜோ பிடன்

ஜோ பிடன்

பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராகப் பதவியேற்கும் முன் ஜோ பிடன் அமெரிக்காவின் வெளியுறவும் பிரிவின் செனேட்டராக இருந்தார். 2006ல் அதாவது துணை அதிபராகப் பதவியேற்க 3 வருடங்களுக்கு முன்பு ஜோ பிடன், '2020ல் உலகிலேயே மிகவும் நெருங்கிய நண்பர்கள் நாடாக அமெரிக்காவும் - இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவு' எனக் கூறியவர் பிடன்.

 அணுசக்தி ஒப்பந்தம்

அணுசக்தி ஒப்பந்தம்

அதன் பின்பு 2008ல் பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் ஜோ பிடன் செனேட்டராக இருக்கும் அவரது தலைமையில் தான் இந்தியா - அமெரிக்கா இடையில் நடந்த முக்கியமான அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் ஒப்புதல் பெற ஜோ பிடன் Democrats மற்றும் Republicans கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் அமைப்பு முன் ஒப்புதல் அடையச் செய்ததில் பிடன் முக்கியப் பங்கு வகித்தவர்.

பாதுகாப்பு கூட்டணி
 

பாதுகாப்பு கூட்டணி

இதே பராக் ஒபாமா - ஜோ பிடன் நிர்வாகம் தான் இந்தியாவின் எல்லைகளை வலிமைப்படுத்த அதிநவீன மற்றும் முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிக்க ஒப்பந்தம் செய்தது.

இத்தகைய ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என்பதால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா - இந்தியாவின் நட்புறவு அனைவரையும் வியக்க வைத்தது.

சீனா பிரச்சனை

சீனா பிரச்சனை

இந்தியா - அமெரிக்க நட்புறவில் ஜோ பிடன் ஒரு செனேட்டராகவும், துணை அதிபராக இருக்கும் போதே வியக்க வைக்கும் பல விஷயங்களைச் செய்துள்ள ஜோ பிடன் தற்போது மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த அமெரிக்க அதிபர்.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய எல்லையில் சீனா ராணுவம் பல பிரச்சனைகளை அளித்து வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தை விடவும் சீன பிரச்சனையில் ஜோ பிடன் நிர்வாகம் பெரிய அளவில் உதவி செய்யும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை எனக் கணிக்கப்படுகிறது.

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி சீனா பங்குச்சந்தையில் அடைந்துள்ள வீழ்ச்சியில் அமெரிக்கா சீனா மீது வைத்துள்ள நிலைப்பாட்டைச் சிறப்பாக விலக்குகிறது.

இந்நிலையில் இந்திய - சீனா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஜோ பிடன் வெற்றியும், இதுநாள் வரையில் ஜோ பிடன் இந்தியா மீது வைத்துள்ள நிலைப்பாட்டின் எதிரொலியாக இருநாடுகள் மத்தியிலான பிரச்சனை விரைவில் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படை

முப்படை

இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படையை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா - இந்தியா இடையில் ஏற்கனவே Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் சீனா உடன் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தம் வாயிலாக முப்படையும் அடுத்தகட்டத்திற்குச் செல்ல ஜே பிடன் வெற்றி பெரிய அளவில் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

டிரம்ப் நிர்வாகம்

டிரம்ப் நிர்வாகம்

கடந்த 6 மாதமாக இந்திய எல்லையில் சீனாவுக்கு எதிராக நடக்கும் பாதுகாப்புப் பணியிலும், பேச்சுவார்த்தையிலும் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்குப் பெரிய அளவிலான சப்போர்ட் கொடுத்தது.

இது ஜோ பிடன் வெற்றி மூலம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India - USA Ties will be great after Joe Biden winning

India - USA Ties will be great after Joe Biden winning
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X