இந்தியா Vs சீனா.. யார் பவர்புல்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய எல்லையில் சீன ராணுவத்துடனான சண்டையில் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகள் மத்தியிலும் போர் மூழும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஏற்கனவே இந்தியாவையும் சீனாவையும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பிரச்சனை மக்கள் மத்தியில் மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் போட்டிப்போட்டு வரும் நிலையிலும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் சீனாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் இந்த நிலையில் சீனா இந்திய எல்லையில் போருக்குத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவின் ஆயுதம் மற்றும் படை பலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

சீனாவின் டார்கெட் இந்தியா மட்டுமில்லை..!சீனாவின் டார்கெட் இந்தியா மட்டுமில்லை..!

ராணுவம்

ராணுவம்

2020ஆம் ஆண்டுத் தரவுகளின் படி உலகிலேயே மிகப்பெரிய ராணுவமாகச் சீனா இருக்கிறது, சுமார் 21.8 லட்சம் ராணுவ வீரர்கள் உடன் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அடுத்தடுத்து டாப் 5 இடங்களைப் படித்துள்ளது.

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை

அமெரிக்காவை அடுத்த அதிக நாட்டின் பாதுகாப்பிற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் சீனா உள்ளது. கடந்த 5 வருடத்தில் சீனா அரசு ராணுவத்திற்காகச் செலவு செய்யும் தொகையின் அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் மட்டும் சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு மட்டும் சுமார் 261.0 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்துள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் சற்றுக் குறைவு தான், 2015ஆம் ஆண்டில் இந்தியா பாதுகாப்புத் துறைக்காக 54.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. இது 2019இல் 71.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

போர் விமானங்கள்

போர் விமானங்கள்

Global Firepower அமைப்பின் தரவுகளின் படி சீனா உலகிலேயே 3வது பெரிய விமானப் படையை வைத்துள்ளதாகக் கூறுகிறது. இந்த அமைப்பின் அறிக்கையின் படி சீனாவிடம் 3,210 விமானங்களும், இந்தியாவிடம் 2,123 விமானங்களும் உள்ளது.

இதேபோல் இந்தியாவை விடவும் 2 மடங்கு அதிகம் பைட்டர் மற்றும் இன்டர்செப்டார் விமானங்கள் இருப்பதாக Global Firepower அமைப்புக் கூறுகிறது. மேலும் சீனாவில் 507 விமான நிலையங்கள் உள்ளது. ஆனால் இந்தியாவில் 346 விமான நிலையங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டாங்கர்

டாங்கர்

தரையிலிருந்து தாக்க கூடிய டாங்கர்கள் இந்தியாவிடம் 4,200 டாங்கர்கள் உள்ளது ஆனால் சீனாவிடம் 3,200 மட்டுமே உள்ளது. ஆனால் சீனாவிடம் 33,000 armoured fighting vehicles உள்ளது, இந்தியாவிடம் 8600 armoured fighting vehicles மட்டுமே உள்ளது.

ராகெட் ப்ரோஜெக்டர்கள்

ராகெட் ப்ரோஜெக்டர்கள்

இந்தியாவில் 266 ராகெட் ப்ரோஜெக்டர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சீனாவிடம் 10 மடங்கு அதிகம் அதாவது 2650 ராகெட் ப்ரோஜெக்டர்கள் உள்ளது.

கடற்படை

கடற்படை

இந்தியாவிடம் 285 naval assets இருக்கும் நிலையில் சீனாவிடம் 777 naval assets இருக்கிறது. இதேபோல் இந்தியாவிடம் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சீனாவிடம் 74 நீர்மூழ்கிகள் உள்ளது.

சீனாவிடம் 36 destroyers-கள் இருக்கும் நிலையில் இந்தியாவிடம் 11 destroyers-கள் மட்டுமே உள்ளது.

 

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

பிரித்வி 1 மற்றும் பிரித்வி 2 என்ற இரு ஏவுகணைகள் இந்தியாவிடம் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. இது இரண்டும் 150 கிலோமீட்டர், 250 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்கக்கூடியது. சீனாவிடமும் பல்வேறு ஏவுகணைகள் உள்ளது.

அனைத்திற்கும் மேலாக இரு நாட்டு மக்களும் வேண்டுவது அமைதி தான், போர் இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Vs China: Who has powerful defence force..?

China ranked second in military spending with military outlays totalling up to $261 billion. Whereas, India ranks third with military outlays totalling to $71.1 billion. China ranks third in aircraft strength with 3,210 aircraft in comparison to India which ranks fourth with 2,123 aircraft. India’s DRDO has been conducting trials of ballistic missile Prithvi-1 which has 150 km-range, and Prithvi-2 with 250 km-range.
Story first published: Thursday, June 18, 2020, 11:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X