காஷ்மீர் விஷயத்தில் கருத்து சொல்வதா.. மலேசியாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடித்த இந்தியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு, நேற்று, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை மலேசிய பிரதமர் விமர்சித்த நிலையில், அந்த நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் மற்றும் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பாமாயில் இறக்குமதி என்பது கட்டுப்பாட்டுக்கு உள்ளே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, ரீபைன் செய்யப்பட்ட பாமாயில்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், இதன்மூலம் கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்தோனேஷியாவுக்கு பலன்

இந்தோனேஷியாவுக்கு பலன்

இதன் மூலம், மலேசியாவுக்குதான் வணிக ரீதியாக பாதிப்பு அதிகம். ஏனெனில் ரீபைன்ட் செய்யப்பட்ட பாமாயில்களை அதிகப்படியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா. ஆனால் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மூலம் கச்சா பாமாயில்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க கூடிய இந்தோனேசியாவுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் கருத்து

காஷ்மீர் கருத்து

இதுபற்றி ராய்ட்டர் செய்தி நிறுவனம் மேலும் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாக மோடி அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன என்று, ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரமற்ற செய்தி

அதிகாரமற்ற செய்தி

முன்னதாக, இந்தியாவிலுள்ள, பாமாயில் ரீபைன்ட் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு தகவலை மத்திய அரசு பரிமாற்றம் செய்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. மலேசியாவிலிருந்து பாமாயில்களை வாங்கக் கூடாது என்பதுதான் அந்த செய்தி.

இந்திய தொழில்கள்

இந்திய தொழில்கள்

இதில் மற்றொரு விஷயத்தையும் பார்க்கவேண்டி இருக்கிறது. ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி இல்லை என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்தியாவில் பாமாயில் ரீபைன் செய்யக் கூடிய தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். காய்கறி எண்ணெய் தயாரிப்புக்கும் ஊக்கம் கிடைக்கும்.

மலேசிய பொருளாதாரம்

மலேசிய பொருளாதாரம்

மலேசிய பொருளாதாரத்தில் பாமாயில் ஏற்றுமதி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் அளவுக்கு பாமாயில் ஏற்றுமதி பங்களிப்பு வைக்கிறது. மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மொத்த பொருட்களில் 4.5% பாமாயில் சார்ந்த பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India vs Malaysia trade war: restrictions on the import of refined palm oil

The Central Government yesterday imposed restrictions on the import of refined palm oil. The Malaysian Prime Minister has criticized India's actions in Kashmir and the Amendment of the Citizenship Act, which restricts the import of palm oil from that country.
Story first published: Thursday, January 9, 2020, 18:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X