அட இது சிங்காரிக்கும் ரோபோசோவுக்கும் செம சான்ஸ் போங்க.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே பதற்றமான நிலையே நீடித்து வருகிறது. அதிலும் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த பின்னர், சீனாவுக்குஎதிரான பரப்புரைகள் அதிகரித்து வருகின்றன.

சீனா வேண்டாம், சீனா பொருட்கள் வேண்டாம் என பல சீனாவுக்கு எதிரான கோஷங்களை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருக்கிறது.

ஏன் சில இடங்களில் சீனபொருட்கள் வேண்டாம் என அவற்றை தூக்கி எறிந்தும், தீயிட்டு கொழுத்தியும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த நிலையில் அரசின் இப்படி ஒரு தடையானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது இந்திய ஆப்களுக்கு சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

சீன செயலிகளுக்கு தடை
 

சீன செயலிகளுக்கு தடை

இப்படி பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில் தான், திங்கட்கிழமையன்று மத்திய அரசு, 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அதுவும் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான டிக் டாக், ஹலோ, ஷேர் சாட், விகோ வீடியோ உள்ளிட்ட பல ஆப்கள் இதில் அடங்கும். அதிலும் சீனாவின் மிக பிரபலமான ஆப்பான டிக் டாக்கின் மொத்த பயனர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் ஆகும்.

பட்டி தொட்டியெல்லாம் பரவிய டிக்டாக்

பட்டி தொட்டியெல்லாம் பரவிய டிக்டாக்

அந்தளவுக்கு இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பரவி வந்த ஆப்களில் டிக் டாக்கிற்கு முன்னுரிமை உண்டு. இப்படி பலரின் ரத்ததிலும் கூட ஊரிப்போன டிக்டாக் தடையால் செய்வது அறியாது தவிக்கும் நம்மவர்கள், தற்போது டிக்டாக்கிற்கு மாற்றாக என்ன கிடைக்கும் என்றும் தேடி வருகின்றனர்.

அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் ரோபோசோ

அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் ரோபோசோ

இந்த நிலையில் இந்திய செயலியான Roposo 10 மில்லியன் பேர் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் டவுன்லோடு செய்துள்ளனராம். சீனா செயலிகள் தடைக்கு முன்பு வரை இந்த செயலியை 65 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்திருந்தனராம். ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னர் 100 மில்லியன் பேர் மொத்தம் பதிவிறக்கம் செய்துள்ளனராம்.

சிங்காரியும் மாஸ்
 

சிங்காரியும் மாஸ்

அதே போல் மற்றொரு இந்தியா செயலியான சிங்காரி, கிட்டத்தட்ட 1 லட்சம் பதிவிறக்கங்களையும் ஒரு மணி நேரத்திற்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் கண்டுள்ளது என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. மேலும் இது தனது வாழ் நாள் பதிவிறக்காமான 3.5 மில்லியன் பதிவிறக்கங்களைக் கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது சிறந்த வாய்ப்பு

இது சிறந்த வாய்ப்பு

அதோடு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 80,000 பதிவிறக்கங்களைக் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் சிங்காரியின் இணை நிறுவனரும், தலைமை தயாரிப்பு அதிகாரியுமான சுமித் கோஷ் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த தளத்தில் பயனர்கள் 2,21,000 வீடியோக்களை பார்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆக சிங்காரிக்கும் ரோபோசோவுக்கும் இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப் படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian apps boom less than 24 hour after centre ban china apps

Indian Apps Like Chingari, Mitron,roposo Benefit as Govt Bans 59 chinese apps.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X