அட்சய திருதியை நெருங்கும் வேளையில் இந்திய வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை திடீரென நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு தங்கும் வெள்ளி இறக்குமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரித்து, சப்ளை குறைந்து தங்கம் , வெள்ளி விலை உயர்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.
இந்தியாவிற்கு தேவையான தங்கம் மற்றும் வெள்ளியில் பெரும்பகுதியை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். பொதுவாக இந்தியாவில் செயல்படக்கூடிய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளியை கொள்முதல் செய்யும். ஆனால் தற்போது அவை நிறுத்தி வைத்திருக்கின்றன.

மத்திய வர்த்தகத் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய , DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்தின் போதும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக கூடிய இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
அந்த வகையில் 2025 ஏப்ரலில் வெளியான அறிவிப்பு கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன் பிறகு DGFT இதுவரை புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதாவது தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து வங்கிகள் , நிறுவனங்களின் பட்டியலை வெளியிடாமல் உள்ளது. எனவேதான் இந்தியா வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன.
வழக்கமாக தங்கம், வெள்ளி சப்ளை செய்யும் வெளிநாட்டு சப்ளையர்களிடம் தற்காலிகமாக புதிய ஆர்டர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தங்கம், வெள்ளியும் டன் கணக்கில் சுங்க துறையிடமே தேங்கி கிடப்பதாக சொல்லப்படுகிறது.
DGFT-இன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பிறகு தான் வங்கிகள் இவற்றை கொள்முதல் செய்யும். இதனால் 8 டன் வெள்ளி, 5 டன் தங்கம் சுங்கத்துறை கிளியரன்ஸ் செய்யாமல் தேங்கி கிடக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே கிளியரன்ஸ் கொடுத்து இந்த தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் கொண்டு வரப்படும் அதே போல புதிய ஆர்டர்களும் கொடுக்கப்படும்.
தங்கம், வெள்ளி இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் சப்ளை கட்டுப்பாடு ஏற்படும் ,ஏற்கனவே அட்சய திருதியை டிமாண்ட் அதிகரித்திருப்பதால் தங்கம் வெள்ளிக்கான சப்ளை குறையும் போது அதன் விலை இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என இந்திய நகை விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகிறார்.
உலக சந்தையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் இந்தியா ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக அரசு தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாக என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன? இனி வரும் நாட்களில் விலை போக்கு எப்படி இருக்கும்?

கோவை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இத படிங்க

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இப்போது முதலீடு செய்யலாமா? காத்திருக்கலாமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் சரிவு!! அட்சய திருதியை வேற வருது!! மக்களே ரெடியா?

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications

