விற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் ஆங்காங்கே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த டிசம்பர் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிகர விற்பனையானது பெரும் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

எனினும் டிசம்பர் காலாண்டில் மலிவான மூலப்பொருட்கள் செலவுகள் நிறுவனங்களுக்கு கைகொடுத்ததாகவும், இதனால் வரிக்கு முந்தைய லாபம் சரியாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து லைவ் மிண்டில் வெளியான செய்தியில், 1,765 நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு அறிக்கையினை பகுப்பாய்வு செய்ததில், விற்பனையானது 21 காலாண்டுகளில் மிகக் குறைவானது என்பதையும் காட்டுகிறது.

எச்சரிக்கையா இருங்க.. தவறான விளம்பரம் கொடுத்தா.. 5 வருடம் சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்!

விற்பனை வீழ்ச்சி

விற்பனை வீழ்ச்சி

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கடந்த டிசம்பர் 2019ல் விற்பனையானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது (டிசம்பர் 2018) முடிவடைந்த டிசம்பர் காலாண்டில் 1.58% குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 19% வளர்ச்சி கண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனினும் லாபம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது, செலவினம் வீழ்ச்சி, மூல பொருட்கள் விலை வீழ்ச்சி இதற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

நிகரலாபம் அதிகரிப்பு

நிகரலாபம் அதிகரிப்பு

எப்படி எனினும் டிசம்பர் காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 19.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இந்த வளர்ச்சி 13.68% வீழ்ச்சியடைந்திருந்தது. இதுவே டிசம்பர் 2018ல் 20.7% வீழ்ச்சி கண்டிருந்தது. கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்புகள், கடந்த இரண்டு காலாண்டுகளின் வருவாயில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்ததால், இதை மதிப்பிட வரிக்கு முந்தைய லாபத்தினை பயன்படுத்தியது இந்த பகுப்பாய்வு.

கார்ப்பரேட் வரி கைகொடுத்தது
 

கார்ப்பரேட் வரி கைகொடுத்தது

எனினும் இந்த பகுப்பாய்வு வங்கிகள், நிதி சேவைகள், மற்றும் எரிசக்தி நிறுவனங்களை விலக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஹெச்.டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை ஆராய்ச்சித் தலைவர் தீபக் ஐசானி கூறுகையில், அதிக வருமானம் இயக்க லாபத்தை அதிகரித்தது. அதே நேரம் குறைந்த வரி காரணமாக, வரிக்கு முந்தைய லாபமும் மிக வேகமாக வளர்ந்தது என்றும் கூறியுள்ளார்.

கார்ப்பரேட் வரியால் பயன்

கார்ப்பரேட் வரியால் பயன்

நாட்டில் சில பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான நிலையினால் இந்தியா இன்கின் வளர்ச்சி கடந்த மூன்றாவது காலாண்டிலும் பாதித்தது. மேலும் இது நான்காவது காலாண்டிலும் கூட தொடரலாம் என்றும் ஐசானி கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி குறைப்பால் சில துறைகள் பயனடைந்துள்ளன. ஆனால் இது அனைத்து துறைகளிலும் கைகொடுத்தது என்று கூறிவிட முடியாது.

மூலதன பொருட்கள் விலை வீழ்ச்சி

மூலதன பொருட்கள் விலை வீழ்ச்சி

ஏனெனில் கடந்த டிசம்பர் காலாண்டில் செலவினம் மற்றும் மூலதன செலவுகள் முறையே, 4.21% மற்றும் 9.62% ஆகவும் குறைந்தது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் முறையே 22.7% மற்றும் 21.5% ஆகவும் இருந்தது. சில மூலதன பொருட்களான கச்சா எண்ணெய், அலுமினியம், காப்பர் மற்றும் இரும்பு விலை 4-15% கடந்த டிசம்பர் காலாண்டில் வீழ்ச்சி கண்டதாகவும் கூறப்படுகிறது.

வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்

வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்

ஒரு நல்ல ராபி அறுவடையில் பின்னணியில் கிராமப்புற பணப்புழக்கங்களில் முன்னேற்றம், அதிக உணவு விலைகள், மேலும் ஒட்டுமொத்த துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க பணவியல் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வருதல் சிறப்பான வளர்ச்சியை அடுத்து வரும் காலாண்டுகளில் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமே அடுத்து வரும் காலாண்டுகளில் விற்பனையை ஊக்குவிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian firms December quarter net sales fall to over 5 year low

Indian companies arrested a decline in earnings before tax in December quarter as cheaper raw material costs and lower expenditure.
Story first published: Monday, February 17, 2020, 14:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X