கொரோனாவால் ரத்தக்களறியான இந்திய வர்த்தகத் துறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பாலும் லாக்டவுன் அறிவிப்பாலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது அனைவருக்கும் தெரியும். இக்காலகட்டத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவீடுகள் சுமார் 57 சதவீதம் சரிவில் சென்றது.

இதன் பின் பல்வேறு தளர்வுகளுக்குப் பின் நாட்டில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை இயங்க துவங்கியது. இதனால் வேலைவாய்ப்பு சந்தை, உற்பத்தி சந்தை, வர்த்தகம் மற்றும் பணப்புழக்கம் அதிகரித்தது.

இதன் வாயிலாக நாட்டின் ஜிடிபி ஜூன் காலாண்டில் 24 சதவீதம் வரையில் சரிந்தது. 1997-98க்குப் பின் நடந்த மாபெரும் சரிவாக இந்தக் கொரோனா சரிவு உள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் எந்தத் துறைகள் எவ்வளவு பாதிப்பு அடைந்தது எனத் தரவுகள் தற்போது வெளியாகி சாமானிய மக்களை ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் சேவைத் துறையை விடவும் உற்பத்தித் துறை தான் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

 

6 மாதத்திற்குப் பின் மெக்டொனால்டு திறக்கப்பட்டது.. மும்பைவாசிகள் ஹேப்பி..!

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

நாம் இப்போது பார்க்கப்போவது அனைத்தும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2020 காலகட்டத்துடன் கடந்த நிதியாண்டில் இதேகாலகட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கப்போகிறோம்.

பயணிகள் வாகன உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் -58.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதேபோல் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு -87.6 சதவீதமும், 2 மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பில் -53.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கன்ஸ்யூமர் டியூரபெல்ஸ்

கன்ஸ்யூமர் டியூரபெல்ஸ்

இந்தியர்களின் வீடுகளில் தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்ட பிரிட்ஜ் தயாரிப்பு -72.6 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் ஏசி உற்பத்தியின் அளவு 84.2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஏசி உற்பத்தி சரிவிற்குச் சீன இறக்குமதியில் ஏற்பட்ட பாதிப்பும் முக்கியக் காரணமாக உள்ளது.

டெக்ஸ்டைல்
 

டெக்ஸ்டைல்

லாக்டவுன் காலத்தில் ஊழியர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் முடங்கிவிட்ட நிலையில், பருத்தி நூல் தயாரிப்பு அளவுகள் -64.4 சதவீதம் வரையில் சரிந்து ஜவுளி துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேபோல் ஆடை தயாரிப்பும் -55.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

நகைகள்

நகைகள்

இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையிலும், தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தங்கம் மற்றும் ரத்தினங்களின் விற்பனை மந்தமான காரணத்தால் இதன் உற்பத்தியும் -46.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

உற்பத்தி உயர்வு

உற்பத்தி உயர்வு

ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் உரங்கள் உற்பத்தி 4.6 சதவீதமும், அக்ரோகெமிக்கல்ஸ் 10.9 சதவீதமும், மருந்து பொருட்கள் 13 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்எம்ஜிசி

எப்எம்ஜிசி

மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் கொண்ட எப்எம்ஜிசி துறையில் ஜூலை காலாண்டில் பால், சர்க்கரை, சேப், டிட்டர்ஜென்ட், ஷாப்பு ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்த நிலையில் டூத்பேஸ்ட் மற்றும் ஹேர் ஆயில் தயாரிப்பு குறைந்துள்ளது.

உலோகம்

உலோகம்

ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் உலோக துறையில் ஸ்டீல் -33 சதவீதமும், நிலக்கரி 10.2 சதவீதமும், அலுமினியம் -4.8 சதவீதமும், காப்பர் -26 சதவீத அளவீட்டில் உற்பத்தி அளவீடுகள் சரிந்துள்ளது.

ஆனால் Zinc 0.3 சதவீதமும், Lead 8.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு

எண்ணெய் மற்றும் எரிவாயு

இதேகாலகட்டத்தில் கச்சா எண்ணெய் -6.1 சதவீதமும், இயற்கை எரிவாயு -13.7 சதவீதமும், சுத்திகரிப்புப் பொருட்கள் -17.5 சதவீதமும் சரிந்துள்ளது.

மேலும் 2020-21ஆம் நிதியாண்டின் துவக்கத்திலேயே லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடுகள் அதிகளவில் குறைந்தது.

பிற துறைகள்

பிற துறைகள்

மின்சாரம், சிமெண்ட் முதல் கேபிடல் கூட்ஸ் உற்பத்தி வரையில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாகப் பாயிலர்ஸ், மின்சார உற்பத்தி உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், டிராஸ்பிர்மர்ஸ், கட்டிட உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், சுரங்க உபகரணங்கள், டெக்ஸ்டைல் இயந்திரங்கள், பிரின்டிங் இயந்திரங்களின் உற்பத்திகள் சராசரியாக 55 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

சரக்கு போக்குவரத்து

சரக்கு போக்குவரத்து

நடப்பு நிதியாண்டு காலத்தில் விமானச் சரக்குப் போக்குவரத்தில் -50.8 சதவீதமும், துறைமுகச் சரக்குப் போக்குவரத்தில் -16.6 சதவீதமும், ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் -21.4 சதவீத சரிவும் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Industries are in bloodbath during Covid-19 Lockdown

Indian Industries are in bloodbath during Covid-19 Lockdown
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X