இந்தியன் ரயில்வே நாடுமுழுவதும் பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது என்பதும் குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம் என்றால் பயணிகளின் முதல் தேர்வு இரயில் பயணம் ஆகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள்நாட்டில் மிகச் சிறந்த சேவை செய்து வரும் இந்தியன் ரயில்வே தற்போது அண்டை நாடுகளிலும் தனது சேவையை நீடிக்க திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தியா மற்றும் பூட்டான் இடையே ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-பூடான்
இந்தியன் ரயில்வே மற்றும் பூடான் ரயில்வே ஆகியவை இந்தியா மற்றும் பூடான் இடையேயான வர்த்தகம் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவை ஏற்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆலோசனை
சமீபத்தில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த வணிக மேம்பாட்டு கூட்டம் நடைபெற்றது. பூட்டான் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், வர்த்தக அமைப்புகள் மற்றும் வர்த்தக சபையின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதேபோல் வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ரயில் பாதை
இந்த ஆலோசனையில் இந்தியா மற்றும் பூட்டான் இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தியா - பூடான் இடையே ரயில்பாதை அமைக்க திட்டம் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அகல ரயில் பாதை
இந்தியாவில்அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் என்ற பகுதியிலிருந்து பூடான் நாட்டில் உள்ள கெலேபு என்ற பகுதி வரை அகல ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான திட்டங்களை இந்திய ரயில்வே ஏற்கனவே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் வளர்ச்சி
இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டால் ஆட்டோமொபைல், சிமெண்ட் உள்பட பல்வேறு பொருள்கள் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் இதன் மூலம் இரு நாட்டு வணிகம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத. இந்தியன் ரயில்வே இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாட்டிலும் தனது சேவையை தொடங்க உள்ள தகவல் இரு நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications