சீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடந்த டிக் டாக்கினை, நம் இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல், மெட்ரோ நகரங்களில் உள்ள சிறிய குழந்தை முதல் பெரியோர் வரை அறிந்திருப்பர்.

Tik Tokகிற்கு போட்டியாக வந்த Chingari App
 

ஏன் அதில் தங்களது திறமைகளையும் காட்டி வந்தனர். எனினும் இதனால் பயன் அடைந்தவர்கள் வெகு சிலரே. ஏனெனில் இது மற்ற தளங்களைப் போல் அல்லாமல், பொழுது போக்கிற்காக பலரும் பயன்படுத்தி வந்தனர். எனினும் இந்தியாவின் எந்தவொரு செயலியும் இந்த பயனர்களை கொண்டதில்லை.

சொல்லப்போனால் இந்திய ஆப் உரிமையாளர்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, குறுகிய காலத்தில் பலமான வளர்ச்சி கண்டது.

சீன செயலிகளுக்கு தடை

சீன செயலிகளுக்கு தடை

ஆக இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு இறையாண்மை கருதி மத்திய அரசு 59 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் நடந்த நல்லதொரு விஷயம் என்னவெனில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் டிக் டாக்கிற்கு பதிலாக மித்ரோன், சிங்காரி, ரோபோசோ, கப்ரி உள்ளிட்ட இந்திய ஆப்கள் தரவிறக்கம் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.

அதிகளவில் பதிவிறக்கம்

அதிகளவில் பதிவிறக்கம்

அது எந்தளவுக்கு எனில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 5 மில்லியன் அளவுக்கு இந்திய ஆப்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாம். உதாரணத்திற்கு இந்தியா செயலியும், டிக் டாக்கிற்கு போட்டியாளராக இருந்த Khabri, சீன செயலிகள் தடை செய்யப்பட்டதிலிருந்து, அதன் பதிவிறக்கம் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அதோடு அதன் தினசரி பயனர்களின் விகிதமும் 8 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

சிறந்த வாய்ப்பு
 

சிறந்த வாய்ப்பு

இந்த தடையானது தற்காலிகமாக இந்திய செயலிகளுக்கு ஒரு வளர்ச்சியினை கொடுத்தாலும், இது இந்திய செயலிகளுக்கு சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது தான் இந்திய செயலிகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நேரம் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய செயலிகளின் வளர்ச்சிக்கு உறுதுணை

இந்திய செயலிகளின் வளர்ச்சிக்கு உறுதுணை

ஏனெனில் இந்த தடையினால் இந்திய செயலிகளுக்கு புதிய பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது அவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும். உதாரணத்திற்கு டிக்டாக் போன்ற தளமான கப்ரி இந்திய மொழி பேசுபவர்களுக்கு சிறந்ததொரு தளமாக மாறி வருகின்றது. ஏற்கனவே 40,000 இன்புளூயன்சர்களை (influencers ) கொண்டுள்ள கப்ரி, கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 5000 புதிய இன்புளூயன்சர்களை கவர்ந்துள்ளது.

பழிவாங்கும் பதிவிறக்கம்

பழிவாங்கும் பதிவிறக்கம்

அவர்கள் கப்ரியுடன் சேர்ந்து புதிய வீடியோ பதிவுகளை உருவாக்கி அதன் மூலம் வருவாயை ஈட்ட முனைந்து வருகின்றனர். ஆக இது மட்டும் அல்ல மித்ரோன், சிங்காரி, ரோபோசோ போன்ற செயலிகளும் நல்ல பலனைக் கண்டு வருகின்றன என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மக்கள் இதனை பழிவாங்கும் பதிவிறக்கம் என்றும் (Revenge Download' கூறுகின்றனர்.

சிறந்த வாய்ப்பு

சிறந்த வாய்ப்பு

ஆக இப்படியாக சீனாவின் செயலிகளை ஒரு வகையில் தடை செய்ததனால் பாதுகாப்பாகவும் உணரப்படுகிறது. அதே நேரம் இது இந்திய செயலிகளுக்கும் நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இது சீனாவுக்கு தக்க பதிலடி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Khabri, chingari apps trying to fill china apps, also peoples naming as revenge download

Chinese apps ban.. Indian apps like kabri, chingari, mitron gain from china apps ban, it may support Indian apps.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X