சேலம், மதுரையில் லம்போர்கினி கார் விற்பனை.. லம்போர்கினி-கே ஷாக் கொடுத்த தமிழர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய வாழ்க்கை முறையில் நடுத்தர மக்களுக்கும் கார் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய வேண்டும் எனப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.

 

இதேவேளையில் இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான சந்தை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 4 வருடத்தில் இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது அடுத்தகட்டத்திற்கு இந்தியா சென்றுள்ளது என்றால் மிகையில்லை.

கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..!

 ஆடம்பர கார்கள்

ஆடம்பர கார்கள்

பொதுவாக ஆடம்பர கார்களின் விற்பனை என்பது சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் தான் இருக்கும், எப்போதாவது ஒரு ஒன்று இரண்டு கார் பிற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டும். ஆனால் தற்போது இந்தியாவில் டையர் 2 நகரங்களில் ஆடம்பர் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

லம்போர்கினி

லம்போர்கினி

உலகளவில் ஆடம்பர கார் பிரிவில் இருக்கும் 4 முக்கியமான நிறுவனங்களில் ஒன்று லம்போர்கினி. இந்நிறுவனத்தின் கார்களின் விலை குறைந்தபட்சம் 4 கோடி ரூபாய் அளவில் இருக்கும் காரணத்தால் இக்கார்களை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி வாங்குவோரும் பெரு நகரங்களில் தான் இருப்பார்கள்.

சேலம், மதுரை
 

சேலம், மதுரை

ஆனால் இந்த ஆண்டு லம்போர்கினி கார்களைத் தமிழ்நாட்டில் சேலம், மதுரை போன்ற 2ஆம் தர நகரங்களில் இருந்து மக்கள் வாங்கியுள்ளனர். சேலம், மதுரை-ஐ தொடர்ந்து இந்தியாவில்

லூதியானா, கான்பூர், கவுகாத்தி, இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் லம்போர்கினி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

புதிய தொழிலதிபர்கள்

புதிய தொழிலதிபர்கள்

தற்போது சிறு நகரங்களில் இருந்து பல புதிய தொழிலதிபர்கள் மற்றும் பரம்பரை வர்த்தகக் குடும்பங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் வளர்ச்சி மற்றும் அந்தஸ்தை மேம்படுத்திக்கொள்ளவும், வாழ்க்கையில் தாங்கள் சாதனை படைத்துள்ளதைக் காட்டும் விதமாக லம்போர்கினி கார்களை வாங்கியுள்ளனர்.

இடைவெளி குறைந்தது

இடைவெளி குறைந்தது

இந்தக் கண்ணோட்டம் பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வர்த்தக இணைப்புகள் மேம்பட்டு, பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மத்தியிலான இடைவெளி பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும்.

25 சதவீத வர்த்தகம்

25 சதவீத வர்த்தகம்

லம்போர்கினி நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவின் தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில், இந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள இப்புதிய மாற்றத்தின் மூலம் எங்களது மொத்த விற்பனையில் 25 சதவீதம் சிறு நகரங்களில் நடந்துள்ளது. இது அடுத்தச் சில வருடத்தில் 50 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லம்போர்கினி URUS

லம்போர்கினி URUS

லம்போர்கினி URUS கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்று சிறு நகரங்களில் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை லம்போர்கினி சுமார் 300 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் 100 கார்கள் கடைசி இரண்டு வருடத்தில் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் 100 லம்போர்கினி கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய 7 ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lamborghini gets 25% Sales from salem, Madurai and other tier 2 cities in India

Lamborghini gets 25% Sales from salem, Madurai and other tier 2 cities in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X