எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 4ம் தேதி தொடங்கவுள்ள பங்கு வெளியீடானது, மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 - 949 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓ-வை தொடர்ந்து ஓராண்டுக்கு FPO இல்லை.. துஹின் காந்தா பாண்டே தகவல்..!

எல்ஐசி பற்றி
இந்தியாவின் முன்னணி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமான சந்தை மதிப்பில் 61.6% பங்கிணை கொண்டுள்ளது. இதே பிரீமியம் அடிப்படையில் 61.4% பங்கினைக் கொண்டுள்ளது. எல்ஐசி பல்வேறு வகையான இன்சூரன்ஸ், வருடாந்திர திட்டங்கள், ஓய்வூதிய திட்டங்கள், டெர்ம் இன்சூரன்ஸ், சேமிப்பு திட்டங்கள் என பலவற்றையும் வழங்கி வருகின்றது. தற்போது நிறுவனத்திற்கு டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர், போபால், பாட்னா ஹைத்ராபாத் உள்ளிட்ட 8 இடங்களில் மண்டல அலுவலகங்களை கொண்டுள்ளது.
அதோடு பிஜி, மொரிஷியஸ், பங்களாதேஷ், நேபாள், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் மற்றும் இங்கிலாந்து பக்ரைன் உள்ளிட்ட இடங்களிலும் செயல்படுகிறது.

லாபம் எவ்வளவு?
இந்த மொத்த அசெட் வளர்ச்சி விகிதம் CAGR 8% அதிகரித்துள்ளது. இது 2017 முதல் 2021 வரை 36.8 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது. இதே நிகர பிரீமியம் 6% அதிகரித்து 4 டில்லியன்களை எட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லபம் 5.1% அதிகரித்து, 2970 கோடி ரூபாயினை எட்டியுள்ளது.

ஆஃபர் ஃபார் சேல்
இந்த பங்கு விற்பனையானது ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 22,13,74,920 பங்குகளை விற்பனை செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது.

சர்வதேச அளவில்
சர்வதேச அளவில் இன்சூரன்ஸ் நிறுவனமான சர்வதேச அளவில் செயல்பாட்டு வருகின்றது. வேறு எந்த நிறுவனத்திலும் இந்தளவுக்கு சர்வதேச அளவில் செயல்படவில்லை. 2021ம் நிதி ஆண்டில் 56 பில்லியன் பிரீமியத்துடன் ஈட்டிய நிகர பிரீமியம் அடிப்படையில் உள்ளது. இது பிரிமிய அடிப்படையில் பார்த்தால் கூட 5வது இடத்தில் உள்ளது.

நீண்டகால நோக்கில் வாங்கலாம்
பாலிசிதாரர்களுக்கும் & ஊழியர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அவர்களுக்கு கிடைக்கும் மிக நல்ல வாய்ப்பு எனலாம். இதற்கிடையில் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதற்கான வளர்ச்சி வாய்ப்புகள், சொத்து மதிப்பு, வளர்ச்சி எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறுவனம் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி எவ்வளவு?
பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாய் தள்ளுபடியும், இதே ஊழியர்களுக்கு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும் அளிக்கப்பட்டுள்ளது.

லாட் சைஸ்
லாட் சைஸ் ஆக 15 பங்குகள் 1 லாட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக அதிகமாக வேண்டுமெனில் 15ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். எனினும் ஒரு நபர் அதிகபட்சம் எவ்வளவு வாங்கலாம் என அறிவிக்கப்படவில்லை.

பட்டியல்?
பங்கு ஒதுக்கீடானது மே 12 அன்று செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 16 அன்று டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு ஒதுக்கீடு?
எல்ஐசி பங்கு வெளீயீட்டில் 50 சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.