உலகளவில் பென்ஷன் திட்டத்தில் இந்தியா படு மோசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

59- 60 வயது வரையில் பணியாற்றி விட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் அனைவருக்கும் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவோ அல்லது தொடர்ந்து நகர்த்தவோ பென்ஷன் மிகவும் முக்கியம்.

இதை உணர்ந்து தான் உலகில் பல நாடுகள் தன் நாட்டு மக்கள் ஓய்வு காலத்தில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அதிகப்படியான நன்மைகளை வழங்கி வருகிறது. இதற்குத் தத்தம் நாடுகளின் வாழ்க்கை முறையும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் Mercer மற்றும் CFA இணைந்து வெளியிட்டுள்ள பென்ஷன் குறித்த ஆய்வு இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அடல் பென்ஷன் யோஜனா: அக்டோபர் 1 முதல் புதிய மாற்றம்..! அடல் பென்ஷன் யோஜனா: அக்டோபர் 1 முதல் புதிய மாற்றம்..!

பென்ஷன் இன்டெக்ஸ்

பென்ஷன் இன்டெக்ஸ்

Mercer மற்றும் CFA இன்ஸ்டியூட் இணைந்து 14 வது ஆண்டாகக் குளோபல் பென்ஷன் இன்டெக்ஸ் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த Mercer மற்றும் CFA அமைப்பு 65 சதவீத மக்கள் தொகை கொண்ட 44 நாடுகளின் பென்ஷன் சிஸ்டத்தை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

44 நாடுகள்

44 நாடுகள்

இந்த அறிக்கையில் எந்த நாட்டில் ஓய்வூதிய திட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தரம் பிரிக்கிறது. இந்த வகையில் 44 நாடுகளுக்கும் கிரேடு கொடுத்து, மதிப்பெண்கள் கொடுத்துப் பட்டியலிட்டு உள்ளது. இதில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம் என்ன தெரியுமா..?

டாப் 3 நாடுகள்

டாப் 3 நாடுகள்

Mercer மற்றும் CFA இன்ஸ்டியூட்-ன் குளோபல் பென்ஷன் இன்டெக்ஸ் அறிக்கையில் ஐஸ்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் மக்களின் வாழ்க்கை முறை, சுகாதாரம், மருத்துவம் ஆகியவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் காரணத்தால் ஓய்வூதிய வயதை அனைத்து நாடுகளும் அதிகரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.

 ஓய்வூதிய வயது

ஓய்வூதிய வயது

இதேபோல் உலகில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தாலும் ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும் அனைத்து நாடுகளும் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்தியா

இந்தியா

இந்த 44 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 41 வது இடத்தைப் பெற்று மோசமான மதிப்பீட்டையும், கிரேட்-யும் பெற்றுள்ளது. இந்தியாவுக்குப் பின் அர்ஜென்டீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளது. எந்த நாடுகள்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercer CFA Global Pension Index 2022: India stands 44 out 41; Iceland, Netherlands, Denmark tops the list

Mercer CFA Global Pension Index 2022: India stands 44 out 41; Iceland, Netherlands, Denmark tops the list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X