குஜராத்தில் முதலீடுகளை வாரி இறைக்கும் அம்பானி.. ரூ.5.95 லட்சம் கோடி.. அதானியின் முதலீடு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பல சிறுகுறு நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இன்னும் சில நிறுவனனங்கள் நஷ்டத்தினை ஈடுகட்ட ஊழியர்கள் பணி நீக்கம், சொத்துகளை விற்பனை செய்தும் ஈடு கட்டி வருகின்றன.

Recommended Video

Ambani's RIL to Plan Big Investments in Gujarat | OneIndia Tamil
 

இதில் பொதுத்துறை நிறுவனமும் அடங்கும். இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறுவனத்தினை மேற்கொண்டு எப்படி நடத்துவது என்று தத்தளித்து வரும் நிறுவனர்களுக்கு மத்தியில், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டு இருக்கும் அம்பானியும், அதானியும் மாறி மாறி முதலீடுகளை வாரிக் குவித்து வருகின்றனர்.

மாபெரும் முதலீடு

மாபெரும் முதலீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, குஜராத்தில் 5.95 லட்சம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் முதலீட்டினை பற்றிய ஒப்பந்தத்தில் வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாடு 2022ல் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 - 15 ஆண்டுகளில் முதலீடு

10 - 15 ஆண்டுகளில் முதலீடு

குஜராத்தை கார்பன் உமிழ்வு இல்லாத மாநிலமாக மாற்ற, ரிலையன்ஸ் அடுத்த 10 - 15 ஆண்டுகளில் 5.95 லட்சம் கோடி ரூபாய் மூலம், 100 ஜிகாவாட் புதுபிக்கதக்க எரிசக்தி மின் நிலையம் அமைக்க முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் நிலத்தினை தேடும் பணியினை தொடங்கியுள்ளதாகவும் லைவ் மிண்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

இடம் தேர்வு
 

இடம் தேர்வு

இதற்காக குஜராத் அரசுடன் கலந்தாலோசித்து, கட்ச், பனஸ்கந்தா மற்றும் தோலேராவில் இடங்களை தேடி வருவதாகவும் கூறப்ப்படுகிறது. இதில் கட்ச் பகுதியில் 4.5 லட்சம் ஏக்கர் நிலத்தினை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிகின்றது. மேலும் புதுபிக்கதக்க எனர்ஜிக்காக ரிலையன்ஸ் நிறுவனம் தேவையான உள்கட்டமைப்புக்காக முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 - 5 ஆண்டுகளில் எவ்வளவு முதலீடு?

அடுத்த 3 - 5 ஆண்டுகளில் எவ்வளவு முதலீடு?

மேலும் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்காக 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்படுள்ளது. ஜியோவினை விரிவாக்கம் செய்யும் விதமாக அடுத்த 3 - 5 ஆண்டுகளில் 7500 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாகவும், ரிலையன்ஸ் ரீடெயில் 5 ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இதற்கிடையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 0.56% அதிகரித்து, 2535.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 2541 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையாக 2508.40 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இதே பிஎஸ்இ-ல் 0.59% அதிகரித்து, 2535.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 2540.95 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையாக 2508.80 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2750.95 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 1830 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani's RIL to invest Rs 5.95 lakh crore in Gujarat

mukesh ambani's RIL to invest Rs 5.95 lakh crore in Gujarat/குஜராத்தில் முதலீடுகளை வாரி இறைக்கும் அம்பானி.. ரூ.5.95 லட்சம் கோடி.. அதானியின் முதலீடு?
Story first published: Thursday, January 13, 2022, 18:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X