கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டின் மீதான ஆர்வம் பெரியளவில் அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக வயதான காலத்தில் நிச்சயம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் என்பது ஆனித்தரமாக பதிந்துள்ளது எனலாம்.
இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்றும் இதுவே. இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன், மாதம் மாதம் கணிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் என்பது தான்.
3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்
ஆனால் இதற்காக எத்தனை பேர் தயாராகி வருகின்றோம் என்பது தான் கேள்வியே. பலருக்கும் சேமிக்க வேண்டும். ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது எண்ணமாக இருக்கும். எண்ணமாக மட்டுமே இருக்கும். ஆனால் செயலில் அமல்படுத்திருக்கயிருக்க மாட்டார்கள். இதுவே வயதான காலத்தில் அவர்கள் தத்தளிக்க ஒரு காரணமாக இருக்கலாம்.
NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..!

பென்சன் பெறலாம்?
மொத்தத்தில் வயதான காலத்தில் யாரையும் சாரமல், மாதம் மாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வுத் தொகை போலவே கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தேசிய ஓய்வூதிய திட்டம் முதியோர்களுக்கு ஏற்ற சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாத மாதம் பென்சன் பெற முடியும் எனலாம்.

பங்கு சந்தையில் எவ்வளவு?
அரசின் ஓய்வூதிய திட்டமான இது ஈக்விட்டி மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்பினையும் கொடுக்கிறது. இது மாத மாதம் வருமானம் கிடைக்கவும், முதிர்வு காலத்தில் ஒரு கணிசமான தொகையினையும் பெற முடியும். இந்த என்பிஎஸ் திட்டத்தில் பங்கு சந்தையில் அதிகபட்ச வரம்பு என்பது 75% வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு முதலீடு?
மாதம் 5000 ரூபாய் 20 வயதில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். முதலீட்டாளர் 60 வயது வரை முதலீடு செய்து கொள்ளலாம். என்பிஎஸ் கால்குலேட்டர் மூலம் சுமார் 1.91 கோடி ரூபாய் மொத்த முதிர்வு தொகையையும், 1.27 கோடி ரூபாய் வருடாந்திரா மதிப்பையும் பெறுவார். வருடாந்திர திட்டத்தில் வருமானம் 6% கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 63,768 கோடி ரூபாய் மாத ஓய்வூதியமாக பெறலாம்.

SWP திட்டம்
இதில் எஸ் டபள்யூ பி (SWP) திட்டத்தின் மூலம் உங்கள் வருமானத்தினையும் உறுதி செய்து கொள்ளலாம். கணிசமாக கிடைத்த மொத்த முதிர்வு தொகையினை SWP மூலம் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 8% வருமானம் என வைத்துக் கொண்டால் சுமார் 1.43 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும். எனினும் இந்த SWP திட்டத்தில் சரியான ஃபண்டுகளை தேர்வு செய்வது அவசியம்.
ஆக மொத்தம் SWP திட்டம் மூலம் கிடைக்கும் வருமானம், வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் வருமானம் சேர்த்து மாதம் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.