ஒடிசா, குஜராத், கர்நாடகா வேற லெவல் வளர்ச்சி.. தமிழ் நாட்டின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஒடிசா, குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், நடப்பு ஆண்டில் 2021 -22ல் சிறந்த ஏற்றுமதி மாநிலங்களாக வளர்ச்சி கண்டுள்ளன.

 

இந்த மாநிலங்களின் ஏற்றுமதி தேசிய சராசரியாக 34.6%ஐ விட வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதி விகிதத்தில் குஜராத் 30% பங்கு வகிக்கிறது. இது கடந்த 2021 - 22ம் ஆண்டில் 127 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் ஏற்றுமதி எவ்வளவு?

தமிழகத்தின் ஏற்றுமதி எவ்வளவு?

மகராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முறையே 73 பில்லியன் டாலர் மற்றும் 35 பில்லியன் டாலராகவும் ஏற்றுமதி செய்துள்ளன. இதற்கிடையில் தான் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி விகிதம் 422 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில் குஜராத் முந்தைய ஆண்டினை காட்டிலும், கடந்த நிதியாண்டில் இரண்டு மடங்கு ஏற்றுமதி செய்துள்ளது.

குஜராத்தின் ஏற்றுமதி அதிகம்?

குஜராத்தின் ஏற்றுமதி அதிகம்?

குஜராத் அதிகளவில் பெட்ரோலியம் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள், நகைகள், கற்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றது.

இதே கர்நாடகாவின் ஏற்றுமதி 56% அதிகரித்துள்ளது. இதே ஓடிசாவின் ஏற்றுமதி விகிதமானது 2021 - 22ம் ஆண்டில் 156% அதிகரித்து, 178.06 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது இரும்பு மற்றும் இரும்பு தாதுக்கள், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கின்றது.

 

சராசரி வளர்ச்சியை விட அதிகம்
 

சராசரி வளர்ச்சியை விட அதிகம்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்கள், தேசிய சராசரியை விட வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதில் டெல்லி மற்றும் கேரளா முறையே 20% மற்றும் 56% ஏற்றுமதி குறைந்துள்ளது.

இது குறித்து DGCIS அறிக்கையின் படி, 2020 - 21ல் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்த நிலையில், அது ஒரு சாதாரண வருடமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

தமிழகம் & மகாராஷ்டிரா

தமிழகம் & மகாராஷ்டிரா

2021 - 22ல் மொத்த ஏற்றுமதியில் 4ல் ஒரு பங்கினை கொண்ட மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு 73 பில்லியன் டாலர் மற்றும் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியினை செய்துள்ளன. இது தேசிய சராசரியை விட முறையே 13% மற்றும் 17.2% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. மகராஷ்டிராவில் மருந்துகள், முத்துகள், விலையுயர்ந்த ஆபரணங்கள், விலையுயர்ந்த கற்கள், இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட பலவற்றை ஏற்றுமதி செய்கின்றது.

வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்

வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்

ஏற்றுமதி விகிதம் அதிகரிப்பது, மேற்கோண்டு வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்க உதவுகிறது. ஆக ஏற்றுமதியினை அதிகரிக்க, அரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக மாவட்டம் தோறும் ஏற்றுமதி அபிவிருத்தி மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு 2100 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலை?

தமிழகத்தின் நிலை?

வணிகவியல் துறையானது மோட்டார் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், பருத்தி ஆடைகள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் தமிழகம், மருந்து ஏற்றுமதி, கடல் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என மாற்றக்கூடும் என ஒரு ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Odisha, Gujarat, Karnataka top exporters: What about Tamil Nadu?

Odisha, Gujarat, Karnataka top exporters: What about Tamil Nadu?/ஒடிசா, குஜராத், கர்நாடகா சிறந்த ஏற்றுமதியாளர்கள்: தமிழ் நாட்டின் நிலை என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X