இந்தியாவுக்கு வரத் துடிக்கும் நிறுவனங்கள்..அசத்தும் முதலீடுகள்.. ஆச்சரியபட வைக்கும் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பல நாடுகள் மிகவும் பின்னடைந்து காணப்படுகின்றன. அது பொருளாதார ரீதியாகவும் சரி, வணிக ரீதியாகவும் சரி.

ஆனால் இந்த மோசமான நெருக்கடியிலும் இந்தியாவுக்கு நடந்த ஒரு சாதகமான ஒரு நல்ல விஷயம், சாம்சங் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர ஆர்வம் காட்டியுள்ளன.

 இந்தியா வர ஆர்வம்

இந்தியா வர ஆர்வம்

சாம்சங்கினைத் தவிர, ஃபாக்ஸ்கானின் Hai Precision Industry Co நிறுவனம், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகாட்ரான் கார்ப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தியினை தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. இவைகள் 1.5 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

எந்தெந்த துறை?

எந்தெந்த துறை?

பார்மா தொழில் சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், உணவு உள்ளிட்ட பல துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியா வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா சீனா வர்த்தக பதற்றங்கள், கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில் விநியோக சங்கிலிகளைப் பன்முகப்படுத்த நிறுவனங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன.

சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்

சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்

இவ்வாறு சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் அதிக கவனத்தினை ஈர்க்கும் இடங்களில் வியட்நாம் முக்கிய இடத்தில் உள்ளது. இதனையடுத்து கம்போடியா, மியான்மர், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகியவை தொடர்ந்து உள்ளன என்று ஸ்டேண்டர்டு சார்டர்டு பிஎல்சி அறிக்கை கூறியுள்ளது.

ஜிடிபி அதிகரிக்கும்

ஜிடிபி அதிகரிக்கும்

இதே இந்தியாவில் ஊக்கத் தொகை கொடுத்து மொபைல் உற்பத்தி ஆலைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. இது ஜிடிபியில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும், இது 2025ம் நிதியாண்டில் 25 பில்லியன் டாலர் ஆக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பல வாய்ப்புகள் காத்துள்ளது

பல வாய்ப்புகள் காத்துள்ளது

இதன் நடுத்தர காலத்திற்குள் விநியோகச் சங்கிலிகளின் அடிப்படையில் இந்தியா பல வாய்ப்புகளை பெற வாய்ப்புள்ளது, என்று மும்பையில் உள்ள டாய்ச் வங்கியின் மூத்த தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் தாஸ் கூறியுள்ளார். இந்த திட்டங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் உற்பத்தி பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் திட்டத்தால் மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் 153 பில்லியன் டாலர் மதிப்புள்ள உற்பத்தி பொருட்களுக்கு வழிவகுக்கும். அதோடு இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்க முடியும் என்று அரசு தரப்பில் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

முதலீடுகள் அதிகரிக்கும்

முதலீடுகள் அதிகரிக்கும்

இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர்கள் கூடுதல் முதலீட்டுகளை ஈர்க்கும். இது இந்திய பொருளாதாரத்தில் 0.5% வளர்ச்சியினைக் கூட்டும் என்று கிரெடிட் சூயிஸ் குழுமம் கணித்துள்ளது. இது உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியில் கூடுதலாக, 10% ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மாறக்கூடும். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவிலிருந்து வந்தவை என்று ஆகஸ்ட் 10 அன்று ஒரு அறிக்கையில் எழுதியுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கும்

முதலீடுகளை ஈர்க்கும்

பிரதமர் நரேந்திர மோடியின் மேன் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் உற்பத்தி பங்கை, தற்போதைய 15%ல் இருந்து 25% ஆக அதிகரிக்கக்கூடும். இது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அதன் முதல் சுருக்கத்திற்கு வழிவகுத்த பொருளாதாரத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க முற்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over two dozen companies willing to set up mobile phone factories in india

Over two dozen companies willing to set up mobile phone factories in india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X