9 நாளில் ரூ.663 கோடி லாபம்.. மத்திய பட்ஜெட்டால் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இவரை பற்றி நீங்கள் தெரிந்திருந்தால், நிச்சயம் பங்கு சந்தை பற்றியும் தெரிந்திருக்கலாம். இந்தியாவின் வாரன் பப்பெட் எண்று அழைக்கப்படும் இவர், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர்.

 

ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனரான இவர், இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்.

பங்கு சந்தையில் இவரின் முதலீட்டு மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

ஜுன்ஜுன்வாலாவின் மொத்த லாபம்

ஜுன்ஜுன்வாலாவின் மொத்த லாபம்

கடந்த பிர்பவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, இந்திய சந்தைகள் 9% அதிகரித்துள்ளது. இந்த சந்தை ஏற்றமானது, இந்திய சந்தைகளில் முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு மிக சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் பட்ஜெட் 2021க்கு பிறகு 7 வர்த்தக அமர்வுகளில் 5 பங்குகளின் மூலம் 663 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளார்.

நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சனின் லாபம்

நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சனின் லாபம்

அதெல்லாம் சரி, அந்த ஐந்து பங்குகள் என்னென்ன? விவரம் இதோ. நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் அல்லது ncc (Nagarjuna Construction Company), ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் முதலிடத்தில் உள்ள பங்கு இது தான். இந்த பங்கு தான் அதிக லாபம் கொடுத்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்பு 461.38 கோடி ரூபாயாக பங்கின் மதிப்பு, பட்ஜெட்டுக்கு பிறகு தற்போது 722.23 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஏற்றத்தினால் ஜுன்ஜுன்வாலாவின் 7.83 கோடி ஈக்விட்டி பங்குகள் மூலம் 260.85 கோடி ரூபாயினை ஈட்ட உதவியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் மூலம் எவ்வளவு லாபம்?
 

டாடா மோட்டார்ஸ் மூலம் எவ்வளவு லாபம்?

ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது டாடா மோட்டார்ஸ். இது பட்ஜெட் நாளில் இருந்து 25% லாபத்தினை ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தில் ராகேஷூக்கு 4 கோடி பங்குகள் உள்ளன. பட்ஜெட்டுக்கு முதல் 1050 கோடி ரூபாயாக இருந்த பங்கின் விலை, 1310 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 260 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளது.

கரூர் வைஷ்யா வங்கி

கரூர் வைஷ்யா வங்கி

கரூர் வைஷ்யா வங்கியில் ஜுன்ஜுன்வாலாவுக்கு 3.59 கோடி பங்குகள் உள்ளது. தனியார் துறையை சேர்ந்த இந்த வங்கியானது பட்ஜெட்டுக்கு முதல் நாள் வர்த்தகத்தில் இருந்து 32% ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் ஜுன்ஜுன்வாலாவுக்கு 48.57 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

ஃபெடரல் வங்கி மூலம் எவ்வளவு?

ஃபெடரல் வங்கி மூலம் எவ்வளவு?

ஃபெடரல் வங்கியின் பங்கு விலையானது ஜனவரி 31, 2021 அன்று 72.4 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, பிறகு 83.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 51 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்டெக் நிறுவனம்

ஆப்டெக் நிறுவனம்

ஆப்டெக் நிறுவனத்தின் 23% பங்குகளை வைத்துள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது பட்ஜெட் நாளில் இருந்து 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு 43 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஆக மொத்தத்தில் அவரின் போர்ட்போலியோவில் உள்ள இந்த பங்குகள் பெரும் லாபத்தினை இந்த குறுகிய காலத்தில் ஈட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh jhunjhunwala made Rs.663 crore from gains in 5 stocks in just 9 days since budget 2021

Stock market updates.. Rakesh jhunjhunwala made Rs.663 crore from gains in 5 stocks in just 9 days since budget 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X