இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சீனா எல்லை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே #boycott china, #BoycottChineseProducts என்ற பரப்புரைகள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 10 அன்று அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் இந்த ஆண்டு இந்துஸ்தான் ராக்கியை கொண்டாட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது.

அதாவது இந்த ஆண்டு ராக்கி விழாவில் சீன ராக்கிகளையோ அல்லது ராக்கி சம்பந்தப்பட்ட பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில் இன்று கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் விழாவில் பயன்படுத்தப்படும் ராக்கிக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

சீன பொருட்கள் புறக்கணிப்பு
 

சீன பொருட்கள் புறக்கணிப்பு

வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடப்படும் இந்த விழா, ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இது இந்து பண்டிகை என்றாலும் கூட, மதங்களை தாண்டி அனைத்து தரப்பினராலும் மிக கோலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி கோலகமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது சீன பொருட்களே. ஆக அதனை புறக்கணிக்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் கடந்த மாதமே கேட்டுக் கொண்டது.

சீனாவுக்கு ரூ.4,000 கோடி நஷ்டம்

சீனாவுக்கு ரூ.4,000 கோடி நஷ்டம்

அதுமட்டும் அல்ல இதன் மூலம் சீனாவுக்கு 4,000 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு சீன பொருட்கள் வேண்டாம். சீனா வேண்டாம் என்ற பரப்புரைகளுக்கு மத்தியில், பல தரப்பில் இருந்தும் சீனாவினைத் தவிர்க்க முடியாது. சீனா பொருட்களை தவிர்க்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற கட்டுக்கதையை இந்தியா உடைத்து விட்டதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி இல்லை

சீனாவில் இருந்து இறக்குமதி இல்லை

இதன் காரணமாக ஒரு ராக்கி கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அகில இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பிசி பார்டியா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 கோடி ராக்கிகள், சுமார் 6,000 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன.

சீனாவின் பங்கு
 

சீனாவின் பங்கு

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ராக்கிகள் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையில் சீன பொருட்கள் புறக்கணிப்பு பற்றி பேசியா பார்டியா மற்றும் கண்டேல்வால் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வர்த்தகர்கள் "China Quit India" என்ற பிரச்சாரத்தினை தொடங்குவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக பிரச்சாரம்

சீனாவுக்கு எதிராக பிரச்சாரம்

இந்த பிரச்சாரமானது 800 இடங்களில் தொடங்கலாம் என்றும், இவர்கள் China Quit India" பரப்புரையை மேற்கொள்வார்கள் என்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் 500 வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு ஆகஸ்ட் ஐந்து அன்று அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, விழாவில் நாடு முகழுவதும் உள்ள வர்த்தகர்கள், தங்கள் வீடுகளிலும் கடைகளிலும் ஒரு விளக்கு அல்லது கிளாட்டர் மணிகளை ஏற்றி வைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

raksha bandhan 2020: china losses Rs.4,000 crore amid india made rakhis

#BoycottChineseProducts.. CAIT said that august 9 traders from all over the country will start the “china quit india” campaign.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X