உலகளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்கனவே பல நாடுகளில் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
இதன் காரணமாக பல நாட்டில் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
ஒரு புறம் வட்டி அதிகரிப்பால் பணவீக்கமானது கட்டுக்குள் வரலாம் என்றாலும், மறுபுறம் இது பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
3 தரமான மல்டிபேக்கர் பங்குகள்..ரூ.1 லட்சம் கோடியான கதை.. எவ்வளவு ஆண்டில்.. உங்கள் வசம் இருக்கா?

மந்த நிலை கணிப்புகள்
இதன் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் வெளியாகி வரும் நிலையில், ETயில் வெளியான தரவின் படி எந்த நாட்டில் எந்தளவுக்கு மந்த நிலைக்கு வரலாம் என்பது குறித்தான கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதன் படி எந்த நாட்டில் மந்த நிலை வரலாம்? இந்தியாவின் மீதான கணிப்பு எப்படியுள்ளது? மற்ற நாடுகளின் நிலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இலங்கை
இலங்கையில் நிலவி வரும் அசாதாரணமாக நிலைக்கு மத்தியில், விலைவாசி மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. பணவீக்கமும் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் அங்கு அன்னிய செலவாணி கையிருப்பும் மிக மோசமான நிலையில் உள்ளது, பலத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் இலங்கை சிக்கித் தவித்து வருகின்றது. இந்த நிலையில் இலங்கையில் 85% ரெசசனுக்கு வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

நியூசிலாந்து
இலங்கை அடுத்து 2வது இடத்தில் இருப்பது நியூசிலாந்து ஆகும். இங்கு 33% ரெசசனுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் கொரியா 3வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் ஜப்பானும் உள்ளது. இங்கு 25% ரெசனுக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் நிலை?
இதே சீனா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, தாய்வான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 20% ரெசசனுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே மலேசியாவில் 13%மும், வியட்னாம் மற்றும் தாய்லாந்தில் 10% ரெசசனுக்கு வாய்ப்பிருப்பதாகவும், இந்தோனேஷியாவில் 3% இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் 0% என்ற அளவுக்கே ரெசசன் உள்ளது. இது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க தங்க முலாம்.. உலகிலேயே காஸ்ட்லியான டெஸ்லா கார் இதுதான்..!