இந்தியாவின் பணக்கார மாநிலம் எது..? குஜராத்துக்கும் தமிழ்நாடுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சில மாநிலங்கள் செல்வம் படைத்தவையாகவும், சில ஏழை மாநிலங்களாகவும் உள்ளன. அதில் சில மாநிலங்கள் விவசாயத்தையும், சில மாநிலங்கள் தொழில்துறையையும் நம்பி வருகின்றன. இதில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

 

எனவே இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் மற்றும் அவற்றின் வலிமை, அது அவர்களை எப்படி பணக்காரர்களாக ஆக்குகிறது என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

செலவை குறைக்க செம திட்டம்.. 90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. ஜெரோதா வெற லெவல் ! செலவை குறைக்க செம திட்டம்.. 90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. ஜெரோதா வெற லெவல் !

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்தியாவின் பணக்கார மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். அதன் தலைநகரம் மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக உள்ளது. மகாராஷ்டிராவின் ஜிடிபி 35.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 45 சதவீதத்தினர் நகரப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

உற்பத்தி, சர்வதேச வர்த்தகம், வெகுஜன ஊடகம், விண்வெளி, தொழில்நுட்பம், பெட்ரோலியம், ஃபேஷன், ஆடை மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் மகாராஷ்டிராவின் பலம். மகாராஷ்டிராவின் வருவாயில் விவசாயம் 51 சதவீதம், தொழில்துறை 9 சதவீதம், சேவைகள் துறை 40 சதவீதம் வகிக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவின் 2வது மிகப் பணக்கார மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இந்த மாநிலத்தில் 50 சதவீத மக்கள் நகரப்பகுதிகளில் வசிக்கின்றன. தமிழ்நாட்டின் தற்போதைய ஜிடிபி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மாநிலத்தின் ஜிடிபியில் 45 சதவீதம் சேவைத் துறையும், 34 சதவீதம் உற்பத்தித் துறையும், 21 சதவீதம் விவசாய துறையும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன பாகங்கள், பொறியியல், மருந்துகள், ஆடைகள், ஜவுளி பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயனங்கள் வணிகங்கள் முக்கிய பலமாக உள்ளன.

குஜராத்
 

குஜராத்

குஜராத்தின் ஜிடிபி 22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த மாநிலத்தின் முக்கிய பல விவசாயம் மற்றும் தொழில்துறை. புகையிலை, பருத்தி ஆடைகள் மற்றும் பாதாம் உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது.

மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் விவசாயம் 18 சதவீதம், தொழில்துறை 45 சதவீதம், சேவைகள் துறையில் 36 சதவீதம்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் ஜிடிபி 18.66 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்தியாவின் சிலிகான்வேலியாக கர்நாடாவின் தலைநகரம் பெங்களூரு உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்திய டெலிபோன் இண்டஸ்ட்ரி உள்நாட்டின் முக்கிய நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.

ஜிடிபியில் ஐடி, வேளாண், விண்வெளி, ஜவுளி மற்றும் ஆடை, உயிரி தொழில்நுட்பம் மற்றும் கனரக பொறியியல் தொழில்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 64 சதவீதம், விவசாய துறை 10 சதவீதம், தொழில்துறை 26 சதவீதம்.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசத்தின் ஜிடிபி 15.80 கோடி ரூபாய். உத்திரப் பிரதேசத்தில் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயம் ஆகியவை மாநில மக்களுக்கு வருமானம் அளிக்கின்றன. மாநிலத்தின் ஜிடிபியில் சேவைத் துறையில் 50 சதவீதம், விவசாய துறை 24 சதவீதம், தொழில்துறை 26 சதவீதம்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தின் ஜிடிபி 13.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. விவசாயம் மற்றும் நடுத்தர தொழில் மேற்கு வங்கத்தின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்குவகிக்கின்றன. மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 53 சதவீதம், விவசாய துறை 21 சதவீதம், தொழில்துறை 26 சதவீதம்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் மொத்த ஜிடிபி 10.21 லட்சம் கோடி ரூபாய். இது கனிம வளம் நிறைந்த மாநிலம். இங்கு பொருளாதாரம் விவசாயம், சுரங்கம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்தில் தங்கம், வெள்ளி, மணற்கல், சுண்ணாம்பு, பளிங்கு, ராக் பாஸ்பேட், தாமிரம் மற்றும் லிக்னைட் படிவுகள் உள்ளன. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாநிலமாகும். ராஜஸ்தான் அதன் வரலாற்றுப் பாரம்பரியம் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய மையமாக உள்ளது.

மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 47 சதவீதம், விவசாய துறை 44 சதவீதம், தொழில்துறை 8 சதவீதம்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தின் மொத்த ஜிடிபி 9.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இங்கு 62 சதவீத மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துடன் இணைந்துள்ளனர். தொழில் தொடங்குவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் ஆந்திர பிரதேசம் என உலக வங்கி வர்ணித்துள்ளது. இந்த மாநிலம் இந்தியாவில் 70 சதவீத இறால் உற்பத்தி செய்கிறது.

மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 47 சதவீதம், விவசாய துறை 44 சதவீதம், தொழில்துறை 8 சதவீதம்.

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானாவின் ஜிடிபி 10.49 லட்சம் கோடி ரூபாய். இங்கு இரண்டு பெரிய நதிகளான கிருஷ்ணா மற்றும் கோதாவரி உள்ளதால், அதிக அளவில் பாசன வசதி உள்ளது. ஐடி சேவைகள் மற்றும் பையோ டெக்னாலஜி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 26 சதவீதம், விவசாய துறை 55 சதவீதம், தொழில்துறை 17 சதவீதம்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

2021-2022 நிதியாண்டில் மத்திய பிரதேசத்தின் ஜிடிபி 11.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நாட்டிலேயே வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலமும் இதுதான். மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 37 சதவீதம், விவசாய துறை 62 சதவீதம், தொழில்துறை 5 சதவீதம்.

கேரளா

கேரளா

கேரளாவின் ஜிடிபி 8.76 லட்சம் கோடி ரூபாய். இந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு முக்கிய வருவாய் சேவை துறையிலிருந்துதான் கிடைக்கிறது. கேரளாவில் 85 சதவீதம் இயற்கை ரப்பரும், 97 சதவீதம் கருப்பு மிளகும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 63 சதவீதம், விவசாய துறை 8 சதவீதம், தொழில்துறை 28 சதவீதம்.

டெல்லி

டெல்லி

டெல்லியில் ஜிடிபி 7.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மக்கள் வேலை செய்வதற்கு டெல்லி முதல் தேர்வு. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லி வருகின்றனர். நாட்டின் தலைநகரான டெல்லி பல நிறுவன தலைமையகங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 12வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 86 சதவீதம், விவசாய துறை 2 சதவீதம், தொழில்துறை 12 சதவீதம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richest states of India in 2022 and their strength

Richest states of India in 2022 and their strength | இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் 4 தென் மாநிலங்கள்.. குஜராத், உ.பி. நிலை என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X