இந்தியா பிரிட்டன் வர்த்தகர்களுக்கு விரைவில் ஜாக்பாட்.. ரிஷி சுனக் இந்தியா வருவாரா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வம்சாவளியினை சேர்ந்த இங்கிலாந்தின் பிரதமரான ரிஷி சுனக் இந்தியா வருவாரா என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

சமீபத்தில் பிரிட்டனின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கின் வருகைக்கு பிறகு, இந்தியாவுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியது.

ரிஷி சுனக்கின் வருகைக்கு பிறகு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்படலாம். குறிப்பாக இங்கிலாந்து இந்தியா இடையேயான வணிக சூழலானது சாதகமாக மாறலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு.. புதிய விசா திட்டம்.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..! ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு.. புதிய விசா திட்டம்.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இங்கிலாந்து மற்றும் இந்திய இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தான தகவல்கள் வெளியாகியது. இது குறித்த பெருத்த எதிர்பார்ப்பு இருதரப்பினர் இடையேயும் நிலவி வருகின்றது. ஏற்கனவே இரு நாட்டு அதிகாரிகளும் எஃப்டிஏ குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சுமூக முடிவு எட்டப்படலாம் என்றும் கூறப்படும் நிலையில், இறுதி கட்டத்தினை எட்டியுள்ள இந்த ஒப்பந்தத்தின் இறுதி முடிவு குறித்து ஆலோசிக்க ரிஷி சுனக் இந்தியா வருவாரா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எப்போது முடியும்?

எப்போது முடியும்?


கடந்த ஆண்டு முதலே இந்த ஒப்பந்தம் குறித்தான பேச்சு வார்த்தையானது நடந்து வரும் நிலையில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) மார்ச் 2023க்குள் முடிவடையலாம் என்று கூறப்படுகின்றது. ஆக ரிஷி சுனக் இந்தியா வருகை தந்தால், அது விரைவில் இறுதி கட்டத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு முக்கியம்
 

இந்தியாவுக்கு முக்கியம்

பாராளுமன்றத்தில் பேசிய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் கரன் பிலிமோரியா, இந்தியாவுடன் FTA குறித்து முக்கிய பிரதி நிதி குழுக்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா பிரிட்டன் இடையேயான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். எனினும் இந்தியாவில் 32 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வகிக்கும்.

இருதரப்பு உறவினை வலுப்படுத்தும்

இருதரப்பு உறவினை வலுப்படுத்தும்

இங்கிலாந்து இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக இருக்கும் நிலையில், இந்த இருதரப்பு பேச்சு வார்த்தையானது இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான உறவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் எனலாம். இரு தரப்பு உறவினை இது வலுப்படுத்தும் எனலாம்.

வளர்ச்சியினை ஊக்குவிக்கும்

வளர்ச்சியினை ஊக்குவிக்கும்

இந்தியா இங்கிலாந்து இடையேயான வணிகம் 29.6 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இருந்து வரும் நிலையில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கோண்டு இரு தரப்பு வளர்ச்சியினையும் ஊக்குவிக்கலாம்.

பல கட்ட பேச்சி வார்த்தை

பல கட்ட பேச்சி வார்த்தை

ஏற்கனவே பல கட்ட பேச்சு வார்த்தையானது கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வரும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இந்த வரி குறைப்பு மூலம் ஜவுளி, தோல் மற்றும் விலையுயர்ந்த ஆபரண ஏற்றுமதி என பலவற்றையும் அதிகரிக்க உதவும். இதே இங்கிலாந்தில் ஸ்காட்ச் மற்றும் விஸ்கி மற்றும் ஆட்டோமொபைல் எனவும் வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடி காட்டுவாரா?

கொடி காட்டுவாரா?

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கும், இந்திய பிரதமரான நரேந்திர மோடியும் ஏற்கனவே ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டபோது நேரில் சந்தித்து வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் தற்போது சந்திக்க உள்ளதாக கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

விசாவில் தளர்வு

விசாவில் தளர்வு

ஏற்கனவே இந்தியர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 3000 இளம் இந்தியர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. இது இங்கிலாந்து - இந்தியா யங்க் புரபஷ்னல் ( UK - india young professionals) என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 18 - 30 வயதுடைய இளைஞர்கள் இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rishi sunak may visit india to finalise the Free Trade Agreement

Rishi sunak may visit india to finalise the Free Trade Agreement
Story first published: Sunday, January 22, 2023, 18:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X