இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இது போறாத காலம் எனலாம். ஆரம்பத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதற்கு பிறகு ஜிஎஸ்டி வருகை, பொருளாதார மந்தம், அதனை தொடர்ந்து கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டிக் கொண்டு பிரச்சனையை ஏற்படுத்தி வந்தன.
இன்றும் இந்தியாவில் மிகப்பெரியளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ள துறைகளில் ஒன்று ஆட்டோ மொபைல் துறை.
பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 முக்கிய விஷயங்களை மார்ச் இறுதிக்குள் செய்யணும்!
இது வாகனங்கள் உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்கள் என பல லட்சம் பேருக்கு வாழ்வாதரமாக இருந்து வருகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இது அந்த நம்பிக்கையினை இழக்கத் தொடங்கியுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பிய ஆட்டோமொபைல்
எப்படியிருப்பினும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்போது தான் சற்று இயல்பு நிலைக்கு ஆட்டோமொபைல் துறையும் திரும்பிக் கொண்டுள்ளது. நாட்டில் பல்வேறு துறைகளிலும் கொரோனா காலத்தில் கூட வீட்டில் இருந்து பணி புரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இந்த வாய்ப்பும் ஆட்டோ மொபைல் துறைக்கு இல்லை எனலாம்.

பாதிப்பு
இந்த நிலையில் தற்போது ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகின்றது. இது சப்ளை சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், இது இன்னும் எந்த மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. எப்படியிருப்பினும் நிச்சயம் ஆட்டோமொபைல் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சற்று பிரச்சனை தான்
இது குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா,அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் உடனடி தாக்கம் இல்லை. எனினும் இந்த மோதல் போக்கானது நீண்ட காலத்திற்கு தொடரும் பட்சத்தில் பாதிப்பு இருக்கலாம், அதேபோல இதனால் நேரடி தாக்கம் எதுவும் இல்லை. எப்படியிருப்பினும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது ஒட்டுமொத்த துறையிலும் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதேசமயம் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் சிப் பற்றாகுறையே பெரும் பிரச்சனையாக உள்ளது என கூறியுள்ளார்.

நிலைமை சற்று பரவாயில்லை
கடந்த சில மாதங்களாக சிப் பற்றாக்குறையானது சற்றே பரவாயில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்களது மொத்த திறனில் செப்டம்பர் மாதத்தில் 40% தான் உற்பத்தி செய்யப்பட்டது இதே அக்டோபரில் 60% ஆகவும், நவம்பரில் 83 - 84% ஆகவும், டிசம்பரில் 90% ஆகவும், ஜனவரியில் 91% - 93% ஆகவும் இருந்தது. பிப்ரவரியிலும் உற்பத்தி பரவாயில்லை. ஆக ஒட்டுமொத்த நிலையும் மேம்பட்டுள்ளது. எனினும் இன்னும் 100% எட்டவில்லை. இது இந்த ஆண்டின் இறுதிக்குள் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது உக்ரைன் பதற்றத்தால் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் சற்று தாக்கம் இருக்கலாம்.

மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு
கடந்த பிப்ரவரியில் ஏற்றுமதி உச்சத்தினை எட்டியுள்ளது. எனினும் அதே சமயம் பயணிகள் வாகன விற்பனையானது 7% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது சந்தையில் தேவை அதிகமாக உள்ளது. எனினும் மூலதன பொருட்கள் பற்றாக்குறையானது அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கமும் உச்சம் தொட்டுள்ளது. இதனால் விலை மீண்டும் அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு உள்ளது. இது சுமார் 8 - 10% என்ற அளவில் உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மோதல் பிரச்சனை
இதற்கிடையில் தற்போது நிலவி வரும் ரஷ்யா - உக்ரைன் மோதல் போக்கால் பல கமாடிட்டிகளின் விலை அதிகரித்துள்ளது. இது நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் இது பிரச்சனை குறையும்போது நிலைமை சீரடையலாம். நாங்கள் நிலைமை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளோம். எனினும் நிலைமை தற்போது சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.

விலை அதிகரிக்க திட்டம்
இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் நிறுவனம் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் மூலதன விலையால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆக நிலையை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம். சரியான நேரத்தில் தக்க முடிவினை எடுப்போம். கடந்த ஆண்டில் இத்துறையானது 15% வளர்ச்சி கண்டிருந்தது. இதே நடப்பு ஆண்டிலும் செமி கண்டக்டர் பற்றாக்குறைக்கு மத்தியில் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரிக்கலாம்
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியானது இரு மடங்கு அதிகரிக்கலாம். இந்த ஆண்டில் ஏற்றுமதியானது 2,00,000 ஆக அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதிய ரக பலினோ காருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், இதற்கு அதிக புக்கிங் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பதிவானது இடி அறிக்கையினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.