60 கோடி ரூபாய்க்கு தேசிய கொடி விற்பனை.. மத்திய அரசு அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 2.36 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகள் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகளால் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரையில் வாங்கப்பட்டு உள்ளது.

 

அனைத்து தரப்பினரும் வாங்கும் Government e Marketplace போர்ட்டலான GeM இலிருந்து இந்த 60 கோடி ரூபாய் மதிப்புடைய கொடிகளை வாங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்முதல்கள் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டன என மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இனி ஊழியர்கள் ராஜ்ஜியம் தான்.. புட்டு புட்டு வைக்கும் சர்வே..!இனி ஊழியர்கள் ராஜ்ஜியம் தான்.. புட்டு புட்டு வைக்கும் சர்வே..!

e-மார்க்கெட்ப்ளேஸ்

e-மார்க்கெட்ப்ளேஸ்

அரசு e-மார்க்கெட்ப்ளேஸ் (GeM) ஆகஸ்ட் 9, 2016 அன்று வணிக அமைச்சகத்தால் அரசு சார்பில் வாங்குபவர்களுக்குத் திறந்த மற்றும் வெளிப்படையான கொள்முதல் தளத்தை உருவாக்கத் தொடங்கப்பட்டது. இந்தத் தளத்தின் கீழ் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்திற்காகத் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது.

கொள்முதல் பிரிவு

கொள்முதல் பிரிவு

அரசு e-மார்க்கெட்ப்ளேஸ் (GeM) மத்திய மற்றும் மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் -- அனைத்து அரசாங்க கொள்முதல் பிரிவுகளுக்கு இந்தத் தளம் திறக்கப்பட்டுள்ளது.

ஹர் கர் திரங்கா
 

ஹர் கர் திரங்கா

பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று, 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு நாட்டின் கூட்டு மனசாட்சி மற்றும் அதன் வலிமையின் மறுமலர்ச்சியின் அறிகுறியாகும். இது "பெரிய சோசலிஸ்டுகள் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்களால்" கூட நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறினார்.

ஜூலை 22 அழைப்பு

ஜூலை 22 அழைப்பு

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி அல்லது காட்டுவதன் மூலம் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை வலுப்படுத்தப் பிரதமர் ஜூலை 22 அன்று அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து கொடிகளை விற்பனை செய்வதற்காக 4,159 விற்பனையாளர்கள் GeM தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

இந்தியா முழுவதும் பெரும் பொருட் செலவில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை மத்தியை அரசு செயல்படுத்தியது. 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்..? மக்களாகிய உங்கள் கருத்து என்ன..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

5 நாள் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஊழியர்கள் கெடுபிடி, வழிக்கு வரும் நிறுவனங்கள்..! 5 நாள் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஊழியர்கள் கெடுபிடி, வழிக்கு வரும் நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.60 crore worth of Indian flag sold in Government e Marketplace portal

Rs.60 crore worth of Indian flag sold in Government e Marketplace portal 60 கோடி ரூபாய்க்கு தேசிய கொடி விற்பனை.. மத்திய அரசு அறிவிப்பு..!
Story first published: Tuesday, August 16, 2022, 20:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X