ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும் ரஷ்யாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளைக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வைத்துப் பயமுறுத்தி வரும் நிலையில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக இதன் வர்த்தகம் சரிய துவங்கியது.

 

விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்யா, உக்ரைன் நாட்டில் கைப்பற்றிய பகுதியில் இருக்கும் மக்களைக் கட்டாயப்படுத்தி ரஷ்ய குடியுரிமையை வழங்கி வருவதாகத் தகவல் பரவி வரும், வேளையில் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் நிதிநிலையை ஆட்டுவிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உலக வங்கியின் முக்கிய பதவியில் இன்டர்மிட் கில்.. இதற்கு முன் இருந்த இந்தியர் யார் தெரியுமா? உலக வங்கியின் முக்கிய பதவியில் இன்டர்மிட் கில்.. இதற்கு முன் இருந்த இந்தியர் யார் தெரியுமா?

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகப்படியான வர்த்தகத் தடைகள் விதித்த வேளையில் வருமானத்திற்காக ரஷ்யா தனது கச்சா எண்ணெய் இருப்பை ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டது.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

ஆசிய சந்தையில் இருக்கும் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகளை அளித்த போதிலும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து வருகின்றனர். இதனால் ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள் ஐந்து வாரங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி
 

ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி

ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, ஜூன் மாத மத்தியில் இருந்து ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி இப்போது ஒரு நாளைக்கு 480,000 பேரல்களாக மட்டுமே உள்ளது. இது கடந்த நான்கு வார சராசரி அளவு என்பது மட்டும் அல்லாமல் அதற்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 13 சதவீதம் சரிவாகும்.

ஏற்றுமதி வரி

ஏற்றுமதி வரி

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ரஷ்ய அரசின் ஏற்றுமதி வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 168 மில்லியன் டாலரில் இருந்து 155 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. சர்வதேச தடைகள் மத்தியில் இருக்கும் ரஷ்யாவிற்கு ஏற்பட்டு உள்ள வரிப் பாதிப்பு பெரும் சுமையாகவே பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் இந்தியா

சீனா மற்றும் இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பின்னர் ரஷ்யா-வின் கச்சா எண்ணெய்யை வாங்குவதைச் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரிய அளவில் அதிகரித்தது. ஆனால் தற்போது சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்று, மந்தமான வர்த்தகச் சூழ்நிலை ஆகியவை கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துள்ளது.

கடல்வழி எண்ணெய் ஏற்றுமதி

கடல்வழி எண்ணெய் ஏற்றுமதி

ரஷ்ய கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் இன்றளவும் 55 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொள்முதல் செய்து வந்தாலும் 4 வாரத்தில் ஏற்பட்ட சரிவு அதிகப்படியான பாதிப்பை ரஷ்யா மீது ஏற்படுத்தியுள்ளது.

தேவை சரிவு

தேவை சரிவு

நான்கு வாரத்திற்கு முந்தைய அளவீட்டில் இருந்து சீனாவின் கச்சா எண்ணெய் தேவை சராசரியாக ஒரு நாளைக்கு 52,000 பேரல் குறைந்துள்ளது. இதேபோல் இந்தியாவின் தேவை நாளொன்றுக்கு 18,000 பேரல்கள் குறைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் தீவிரம்

ஐரோப்பிய நாடுகள் தீவிரம்

இதற்கிடையில், நெதர்லாந்தில் இருக்கும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை நிரப்புவதில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக இருக்கும் வேளையில் மூலம் வடக்கு ஐரோப்பா பகுதிக்கான ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் Mediterranean பகுதிக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.

சாயம் வெளுக்கத் துவங்கியது

சாயம் வெளுக்கத் துவங்கியது

ஏற்கனவே பிரிட்டன், ஐரோப்பா ஆகியவை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்பதற்காக அஜர்பைஜான் உடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ரஷ்யா எண்ணெய் அதிகம் வாங்கும் இந்தியா, சீனா கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்த காரணத்தால் ரஷ்யாவின் ஆதிக்கத்தின் சாயம் வெளுக்கத் துவங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russian oil exports have fallen for 5 weeks continuously; India, and China Cuts buying of Russian Oil

Russian oil exports have fallen for 5 weeks continuously; India, China Cuts buying Russian Oil ரஷ்யா-வின் சாயம் வெளுக்கத் துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X